News 5 – (26.09.2024) ஓடிடி தளத்தில் 'கொட்டுக்காளி'!

News 5
News 5

1. எந்த நாட்டவரும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலிடம்!

Migration
Migration

லக அளவில் 2020 வரை புலம்பெயர்ந்தோர் கணக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட விவர அறிக்கை ஒன்றை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வின்படி, ‘2000ல் எடுக்கப்பட்ட ஆய்வின் கணக்கெடுப்பின்படி, இந்தியா ஒண்ணே முக்கால் மடங்கு புலம்பெயர்வில் தற்போது முன்னேறி உள்ளது.

உலகளவில் அதிகமான மக்கள் வெளிநாட்டில் வசிப்பவர்களில் எந்த நாட்டவரும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பிறந்த 17.9 மில்லியன் (ஒண்ணே முக்கால் கோடி) பேர் வெளிநாட்டில் வசிப்பவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2. அந்தமான் - கொச்சி இடையே விமான சேவை துவக்கம்!

Flight
Flight

சென்னையில் இருந்து அந்தமான் - கொச்சி இடையே விமான சேவை தொடங்க உள்ளதாக  'ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து மதியம் 1 மணிக்குப் புறப்படும் விமானம் மாலை 3 மணிக்கு அந்தமான் சென்றடையும். அந்தமானில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12.20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து துவங்க உள்ளன.

மேலும், சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு காலை 6.25 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:20 மணிக்கு சென்றடையும். கொச்சியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8.05 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் துவங்குகின்றன.

3. ‘மாணவிகளுக்கென தனி ஓய்வறை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு!

womens rest
womens rest

‘தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைப்பதற்கு 8.55 கோடி ரூபாயை 3 வாரங்களில் ஒதுக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களை சிறிது கண்டித்தாலே தவறான முடிவு எடுக்கின்றனர்: அரசு வழக்கறிஞர் வேதனை!
News 5

4.  ஓடிடி தளத்தில் 'கொட்டுக்காளி'!

Kottukkaali
Kottukkaali

டிகர் சூரியின் நடிப்பில் வெளியான, 'கொட்டுக்காளி' திரைப்படம், நாளை (செப்டம்பர் 27) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில், Grand Prix பிரிவில், இந்தத் திரைப்படம் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

5. நெட்டிசன்களின் டிரோல்; பதிலடி கொடுத்த மனுபாக்கர்!

Manubakar
Manubakar

பாரிஸ் ஒலிம்பிக்கில் வென்ற இரட்டை பதக்கங்களை எங்கு சென்றாலும் காட்டுவதாக நெட்டிசன்கள் டிரோல் செய்த நிலையில், துப்பாக்கிச்சுடும் வீராங்கனை மனுபாக்கர் "இந்தியாவுக்காக வென்ற பதக்கத்தை மக்களுக்குக் காட்ட எடுத்துச் செல்வதில் தவறு ஒன்றுமில்லை" என தெரிவித்திருந்த நிலையில், தான் இதுவரை துப்பாக்கிச்சுடும் போட்டியில் வென்ற ஏராளமான பதக்கங்களுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com