தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டி தலைநகர் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், சமக்ரா சிக்சா திட்டத்திற்கும் உரிய நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து மின்சார கார்களை உற்பத்தி செய்ய வரும்படி, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 2ம் கட்டமாக 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக 58 தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடிகை சாய்பல்லவியின் கதாபாத்திரத்தை ‘அமரன்’ படக்குழு வெளியிட்ட நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தின் 'ஹே மின்னலே' (hey minnale) பாடல் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது X தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
‘அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல்.லில், போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணமில்லை’ என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
கடந்த மூன்று சீசன்களைப் போலவே ஐபிஎல் 2025ல் மொத்தம் 74 போட்டிகள் விளையாடப்படும். ஜூன் மாதம் தொடங்கும் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை கருத்தில்கொண்டு வீரர்களுக்கு அதிக சுமையை அளிக்க விரும்பவில்லை என பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.