News 5 – (28.09.2024) ‘கூகுள் மீது வழக்கு தொடருவேன்’ - டிரம்ப் ஆவேசம்!

News 5
News 5

1. ‘கூகுள் மீது வழக்கு தொடருவேன்’ - டிரம்ப் ஆவேசம்!

donalad trump
donalad trump

"கூகுள் இணையதளத்தில் என்னைப் பற்றி தேடினால், மோசமான விஷயங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் மட்டுமே காட்டப்படுகின்றன. இது சட்டவிரோதமான செயல்பாடாகும். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன். இது நடக்காவிட்டால், அமெரிக்க சட்டப்படி நான் அதிபராகப் பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன்" என முன்னால் அதிபர் டிரம்ப் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

2. கேரளாவில் குரங்கு அம்மை இரண்டாவது பாதிப்பு!

MPox Clade 1B
MPox Clade 1B

ந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ‘வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்துக்கு புதிதாக வரும் அனைவரும் மாநில சுகாதார நிறுவனத்தை அணுக வேண்டும்’ என்றும், ‘நோய் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

3. ‘3ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு’ வானிலை ஆய்வு மையம் தகவல்!

Rain
RAIN

கோயம்புத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 3ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உச்சக்கட்டத்தில் போர்… ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியை கொன்ற இஸ்ரேல்!
News 5

4. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது!

International Indian Film Academy Award
International Indian Film Academy Award

புதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக மணிரத்னம் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகருக்கான விருதை ‘தசரா’ படத்திற்காக தெலுங்கு நடிகர் நானி பெற்றார். மேலும், சிரஞ்சீவிக்கு இந்திய சினிமாவில் சிறந்த சாதனையாளர் விருதும், சமந்தாவிற்கு 'இந்திய சினிமாவின் இந்த ஆண்டிற்கான 'சிறந்த பெண்' என்ற விருதும் வழங்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திரை பிரபலங்கள் பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான், ராணா டக்குபதி, வெங்கடேஷ் டக்குபதி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாகித் கபூர், அனன்யா பாண்டே, கீர்த்தி சனோன், கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய், ஜாவித் அக்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

5. ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ!

Darren Bravo
Darren Bravo

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் 'ஆல் ரவுண்டர்' டுவைன் பிராவோ, ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக நீண்ட காலம் (2011 - 2022) விளையாடியவர். 2023ல் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக இவர் அசத்தினார். 2024ல் நடைபெற்ற 'டி-20' உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக பணியாற்றினார். தற்போது அனைத்துப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ள பிராவோ, சென்னை அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com