இந்தியாவின் ‘வந்தே பாரத் ரயில்’களை வாங்க கனடா, மலேசியா, சிலி உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு செலவு குறைவு, அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் வந்தே பாரத் ரயிலை வாங்க பல்வேறு உலக நாடுகள் இந்தியாவை நாடுவதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழாவில் நேரு கோப்பைக்கான 70வது ஆண்டு படகுப் போட்டிகள் இன்று தொடங்கின. முன்னதாக, வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் போட்டி துவங்கப்பட்டது, போட்டிகளைக் காண புன்னமடை காயல் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
‘Mini Moon’ என அழைக்கப்படும் ‘2024 PT5’ என்ற சிறிய விண்கல் பூமிக்கு சுமார் 14 லட்சம் கி.மீ. தொலைவில் வரவுள்ளதால், நாளை முதல் நவம்பர் 25ம் தேதி வரை வானில் 2 நிலவுகள் காட்சியளிக்கும் என நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் சந்திரனுடன் சேர்ந்து பூமியின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் என்பதால், இதன் மீது சூரிய ஒளிப்படும்போது நிலவு போல் காட்சியளிக்கும் எனவும், இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும் எனவும் நாசா கூறியுள்ளது.
அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் 'தண்டகாரண்யம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று அப்படக்குழு வெளியிட்டுள்ளது.
கான்பூரில் நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.