சுருக்குப்பை செய்திகள்(09.03.2024)

News
News
 • திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதிக்கீடு என்று அறிவுப்பு. தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக திருமாவளவன், வைக்கோ தெரிவிப்பு.

 • திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்திட நாளை மீண்டும் பேச்சு வார்த்தை தொடரும்.

 • த.வெ.க-த்தில் முதல் நபராக இணைந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய். மக்கள் ஆட்சி, மதர்சார்பின்மை, சமூக நிதி பாதையில் பயணிக்க மக்களுக்கு அழைப்புவிடுத்தார்.

 • TNPSC தகவல் படி, 6000 காலி இடங்களைக் கொண்ட குரூப்-4 தேர்விற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

 • 'விலைவாசியை கடுமையாக உயர்த்திவிட்டு பிரதமர் மோடி மகாத்மா காந்தி போல் பேசுகிறார்' - அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் பிரதமர் மோடி குறித்த விமர்சனம்.

 • தகதகிக்கும் தமிழ்நாடு! வெயில் கொளுத்தத் தொடங்கியாச்சு!

 • 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது வெயில். அதிகபட்சமாக ஈரோட்டில் 103 வெப்பம் பதிவு.

 • ஓ. பன்னீர் செல்வம் தன் ஆதரவாளர்களுடன் நேற்று நள்ளிரவில் யோசனை. பாஜக கூட்டணிப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட கொண்ட குழு அமைப்பது குறித்து உரையாடல்.

இதையும் படியுங்கள்:
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளை அம்மையாருக்கு வீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
News
 • காங்கிரஸ் கட்சியில் 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, திருவனந்தபுரத்தில் சசி தரூர் மீண்டும் போட்டி என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம். பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய அஞ்சலி கோலாகலம்.

 • கட்சியில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புவர்கள் QR Code இணைப்புகளைப் பயன்படுத்தி உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று த.வெ.க தலைவர் விஜய் அறிவித்ததையடுத்து, செயலியில் 40 நிமிடங்கள் ஒரு கோடி கோரிக்கைகள் குவிந்தன. இதனால், செயலியே ஸ்தம்பித்துப் போனது.

 • பத்மஸ்ரீ திருமதி.சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com