

இன்னும் சில நாட்களில் கோடை காலம் தொடங்கவிருக்கும் சூழலில், இப்போதே தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பொதுவாக கோடை நாட்களில் வீடுகளில் ஏசி மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகளவில் இருக்கும்.
இதன் காரணமாக கோடையில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதால், மின்வெட்டு போன்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கும். இதனை தடுக்கும் விதமாக வீடுகளை ஏசி இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தமிழக அரசு விரைவில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் பாரம்பரிய முறைப்படி வீடுகளை கட்டினர். இதனால் இயற்கையாகவே வீடு குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பலரும் நவீன முறைகளில் வீடுகளை கட்டுவதால், இயற்கையாகவே கிடைக்கும் குளிர்ச்சியான வசதியை நாம் தவற விடுகிறோம்.
இதனாலேயே கோடை காலங்களில் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள முடியாமல் ஏசி மற்றும் மின்விசிறி போன்ற மின் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக கோடை காலங்களில் மின்சார பயன்பாடு, சாதாரண நாட்களை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது
மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது வீடு கட்டும் நடைமுறைகளில் புதிய வழிகாட்டுதல்களை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பாரம்பரிய முறைப்படி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏசி பயன்பாட்டைக் குறைத்து, மின்சார சேமிப்பு மற்றும் வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
* குளிர்ச்சியை வழங்கும் மின்சாதனங்கள் இல்லாமலேயே, கட்டிட வடிவமைப்பின் மூலமாக நம் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் வழி தான் இது.
* நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் கட்டிய பழைய வீடுகளில் தாழ்வாரம், நடுமுற்றம் மற்றும் உயரமான கூரை ஆகியவை இயற்கையான குளிர்வித்தல் முறையின் அடிப்படையில் தான் கட்டப்பட்டன.
* தற்போது நவீன அறிவியலைப் பயன்படுத்தி, பண்டைய வழிமுறையை கட்டிட விதிகளில் புகுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்கிறது.
* வீடு மற்றும் கட்டிடங்களில் எந்தெந்த இடத்தில் ஜன்னல் மற்றும் கதவுகளை அமைத்தால் இயற்கையாகவே காற்று சுழலும் என்பது பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட உள்ளது.
* ஒரு கட்டிடத்தில் உள்ளே வரும் வெயில் குறைவாக இருக்க எந்த திசையில் வீடு கட்டப்பட வேண்டும் என்பது பற்றியும் பொது மக்களுக்கு விளக்கப்படும்.
* வீட்டிற்குள் இயற்கையாகவே குளிர்ச்சி இருந்தால் நம் உடல்நலன் சீராக இருக்கும்.
* மேலும் கார்பன் வெளியீடு குறையும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.
* பண்டைய முறைப்படி வீடு கட்டினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏசி இன்றியே வாழ்க்கைத் தரம் உயரும்.
* பொதுமக்களுக்கு மின்சார கட்டணமும் குறையும்.
கட்டிட விதிகளில் கொண்டு வரப்படும் இந்த புதிய வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் கிடையாது. ஏனெனில் இது கட்டாயம் ஆக்கப்பட்டால், அது பொதுமக்களிடம் ஒரு விதமான திணிப்பை ஏற்படுத்தி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த புதிய வழிமுறைகளை பொதுமக்கள் தாங்களாகவே தன்னார்வத்துடன் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் இயற்கையாகவே குளிர்ச்சி இருந்தால் நம் உடல்நலன் சீராக இருக்கும். மேலும் கார்பன் வெளியீடு குறையும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. பண்டைய முறைப்படி வீடு கட்டினால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏசி இன்றியே வாழ்க்கைத் தரம் உயரும். இதன்மூலம் பொதுமக்களுக்கு மின்சார கட்டணமும் குறையும்.