அலர்ட்..! இனி இங்கெல்லாம் இவங்க வாட்ச் பண்ணுவாங்க..! தமிழ்நாட்டில் களமிறங்கிய 'ப்ளூ ஜெர்சி' படை!

singapen special task force
singapen special task forcesource:daily thanthi
Updated on

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், 2026 ஜூன் 9 அன்று சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை' அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். முழுக்க முழுக்க பெண்களை கொண்ட இந்த சிறப்பு காவல் பிரிவு, பொது இடங்களில் கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலமும், ஆபத்து அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிப்பதை உறுதி செய்வதன் மூலமும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று செயல்களை இதன் முக்கிய செயல்பாடுகளாக உள்ளது. அவை,

  • தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகள் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

  • பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில், ரோந்துப் பணிகள் மேற்கொள்வது .

  • குற்றங்களைத் தடுப்பது, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் கவனம் செலுத்துவது

  • இந்த பணிகளை நிறைவேற்ற கீழகண்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

இந்த உயரடுக்கு சிறப்புப் பணிக்குழு, முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது. இதற்குக் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி.) தலைமை தாங்குகிறார். இந்தப் பிரிவில் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட 36 பணியிடங்கள் உள்ளன. இதில் காவல் கண்காணிப்பாளர் (SP), துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSPs), ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பிற தரவரிசையில் அடங்குவர்.

சிறப்புப் பணிப்படைக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, நவீனமயமாக்கப்பட்ட தனித்துவமான நீல நிறச் சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சிறப்புப் பிரிவும் நடவடிக்கைகளும் ஏன் தேவைப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1937 இல் பெண்கள் காவல் துறையில் சேர்க்கப்பட்டனர். தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கு 1973 இல் இருந்து பெண்கள் சேர்க்கப்பட்டனர். அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் நிறையப் பெண்கள் காவல் பணியில் சேர்க்கப்பட்டனர். பெண்கள் தங்கள் குறைகள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான புகார்களைப் பெண் காவலர்களிடம் தயக்கமின்றி பகிர்ந்துகொள்வார்கள் என்ற நோக்கத்தில் பெண்களுக்கான மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கலாம் என்ற யோசனை பிறந்தது.

கேரளத்தின்,கோழிக்கோடு மாவட்டத்தில் கொல்லங்கோட்டில், முழுவதும் மகளிர் காவலர்களைக் கொண்ட "மகளிர் காவல் நிலையம்" முதன்முதலில் 27 அக்டோபர் 1973 அறிமுகப்படுத்தப்பட்டது .1992-ம் ஆண்டு, தமிழகத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகள், வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் காணாமல் போனோர் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்துப் பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்புக் காவல் நிலையம் தோன்றியது. மேலும், குடும்பப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க ‘சமரச மையங்களும்’ (Mediation Centre) இதில் செயல்பட முடிவுசெய்யப்பட்டது .

இந்த மகளிர் காவல் நிலையம் வரவேற்பைப் பெற்றது. இதனால் படிப்படியாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டன. 2022 ஆண்டில் சென்னையில் 31 மகளிர் காவல் நிலையங்களும், சென்னை உள்ளிட்டு, தமிழ்நாடு முழுவதும் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2023 ஆண்டைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இ.கா.ப முதல் காவலர் வரை என 23,542 பெண் காவல் துறையினர் பணியாற்றுகின்றனர்.

singappen special task force
singappen special task forceimage credits :vikatan

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக வேறுபடுகின்றன. பொதுவாக டெல்லி, அசாம், ஒடிசா, ஹரியானா மற்றும் ராஜஸ்தானாகிய மாநிலங்களில் மிக உயர்ந்த விகிதங்கள் பதிவாகின்றன . தொடர்ந்து மிகக் குறைந்த குற்ற விகிதங்களைப் பதிவுசெய்து, அதிக ஒப்பீட்டுப் பாதுகாப்பைக் குறிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு, நாகாலாந்து மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அடங்கும் மாநில வாரியான குற்ற விகிதங்கள் (2023–2024 தரவுகள்)

தேசியக் குற்றப் பதிவுப் பணியகம் (NCRB), ஒரு லட்சம் (அல்லது 100,000) மக்கள்தொகையில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குற்ற விகிதமாகக் கணக்கிடுகிறது.

சமீபத்திய அறிக்கைகள், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களின் பின்வரும் பிராந்தியப் பிரிவைக் காட்டுகின்றன

  • டெல்லி (யூ.டி): 130 முதல் 145 வரை,

  • தெலங்கானா: 124,

  • ராஜஸ்தான்: 114

  • ஒடிசா: 104 முதல் 112 வரை

  • ஹரியானா: 110 அதிகபட்சக் குற்ற விகிதங்கள் (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு) பதிவு செய்துள்ளன.

  • கேரளா: 86,

  • அஸ்ஸாம்: 81,

  • மகாராஷ்டிரா: 76,

  • மேற்கு வங்காளம்: 71

  • ஆந்திரப் பிரதேசம்: 63 ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் அதிகமான குற்ற விகிதங்கள் பதிவாகியுள்ளன.

  • தமிழ்நாடு: 23 முதல் 25 வரை, நாகாலாந்து: தேசிய அளவில் தொடர்ந்து மிகக் குறைந்த பாதிப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

குற்றங்களின் முக்கிய குற்றங்களாக, கணவன் அல்லது அவனது உறவினர்களால் செய்யப்படும் கொடுமை,பெண்களின் மானபங்கத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல்,கடத்தல் மற்றும் ஆள் கடத்தல்,தாக்குதல் மற்றும் கற்பழிப்பு

இந்தியா உலகில் 177 நாடுகளில் 128வது இடத்தைப் பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு தரவரிசை 2023 ல் இடம் பிடித்துள்ளது.குற்றவியல் தகவல் அடிப்படையில் தமிழ்நாடு 2022 ஆண்டு நடந்த 9027 குற்றங்களிலிருந்து 3 சதவிகிதம் குறைந்து 8943 குற்றங்களாக 2023 ல் பதிவாகியுள்ளது.

இது போன்ற சிறப்பான தனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெறும் அளவுக்குக் குறையும் என்று நம்புவோமாக!

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மெகா 'மாஸ்டர் பிளான்'! 40,000 கோடியில் பிரம்மாண்ட எரிவாயு குழாய் திட்டம்..!
singapen special task force
logo
Kalki Online
kalkionline.com