இனி நீட் தேர்வில் OMR ஷீட்!

OMR Sheet
OMR Sheet
Published on

நீட் தேர்வின் மூலம் நாடு முழுவதும்  அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு OMR ஷீட்டில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெறும். விரைவில் விண்ணப்பப் பதிவு மற்றும் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வுக்கான neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முக்கியமான ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும் தேர்வுக்கான விவரங்களைத் தெரிந்துக்கொள்ளவும், இந்த இணையதளத்தை அணுக வேண்டும்.

அந்தவகையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ வாரியம் சார்பாக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் பார்வையிடலாம்.

இதையும் படியுங்கள்:
பழக்க தோஷங்களுக்கு அடிமையாகாதீர்கள்!
OMR Sheet

இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு சுமார் 24 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சை எழுந்தது. எனவே இந்த ஆண்டு சர்ச்சைகளுக்கு இடமின்றி தேர்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆண்டு முதல் தேர்விற்கான விண்ணப்ப பதிவில் APAAR ID மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருகிறது. இதனை ஆதார் கார்டு எண் மூலம் பதிவு செய்யலாம்.

அந்தவகையில் கடந்த மாதம் இந்த ஆண்டு நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படுமா? அல்லது பேப்பர் பேனா மூலம் நடத்தப்படுமா? என்று தெரியவில்லை என்று கல்வி அமைச்சகம் கூறிய நிலையில், இப்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் ரூ.1,000 கோடி மதிப்புமிக்க 'அலிபாக் வில்லா' - ஒரு பார்வை!
OMR Sheet

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீர் தேர்வை பேனா மற்றும் பேப்பர் முறையில் ஓ.எம்.ஆர் ஷீட் அடிப்படையில் நடத்தும் என்றும், தேர்வு ஒரே நாளில் மற்றும் ஒரே ஷிப்டில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com