விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் ரூ.1,000 கோடி மதிப்புமிக்க 'அலிபாக் வில்லா' - ஒரு பார்வை!

Virat Kohli, Anushka Sharma
Virat Kohli, Anushka SharmaImg Credit: Glamsham
Published on

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவிற்கும் சொந்தமான அலிபாக் நகரில் உள்ள வீடு சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக மட்டுமில்லாமல் அதன் அழகால் பல தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல், அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுகின்றனர்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் ஹாலிடே ஹோம் கடற்கரை நகரமான அலிபாக் நகரில் 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடி ரூ.19 கோடிக்கு இந்த இடத்தை வாங்கியது. 1,10,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த வில்லாவை ஆர்க்கிடெக்சரல் டைஜஸ்ட் படி, ஃபிலிப் ஃபூச் (Phillippe Fouche) தலைமையிலான ஸ்டீபன் அன்டோனி ஓல்மெஸ்டால் ட்ரூன் ஆர்கிடெக்ட்ஸ் (Stefan Antoni Olmesdahl Truen Architects ) (SAOTA) நிறுவனம் கட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு: சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஜஸ்பிரித் பும்ரா 'Bed Rest' எடுக்க அறிவுறுத்தல்!
Virat Kohli, Anushka Sharma

இந்த வில்லாவில் வெப்பநிலையை கட்டுப்படுத்தப்படும் குளம், ஒரு பெஸ்போக் சமையலறை (bespoke kitchen), நான்கு குளியலறைகள், ஒரு ஜக்குஸி (jacuzzi) ஆகியவை உள்ளன. இவற்றுடன் அமைதியான உலா மற்றும் வெளிப்புறக் கூட்டங்களுக்கு அனுமதிக்கும் பசுமையான பரந்த தோட்டம், மூடப்பட்ட பார்க்கிங், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பல உள்ளன. அழகிய கற்கள், கவர்ச்சியான இத்தாலிய பளிங்குகள், துருக்கிய சுண்ணாம்புக் கற்கள் கொண்டு இந்த வில்லா முழுவதும் கலைநயத்துடன் அழகு படுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி இந்த வில்லாவை கட்ட ரூ.10.5 கோடி முதல் ரூ.13 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1,000 கோடிக்கு மேல் நிகர மதிப்புடன், விராட் கோலியின் அலிபாக் இல்லம் அவரது பெரிய சொத்து சேகரிப்பில் ஒரு பகுதியாக உள்ளது.

சில நாட்களுக்கு முன் விராட் கோலியும், அனுஷ்காவும் லண்டனுக்கு சென்று நிரந்தரமாக குடியேற போவதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, இந்த நட்சத்திர ஜோடி மும்பையில் 7,171 சதுர அடியில் ரூ.34 கோடி மதிப்பிலான ஆடம்பரமான குடியிருப்பில் வசித்து வருகிறது. மேலும், குர்கானில் ரூ.80 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவும் விராட் கோலிக்கு சொந்தமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
435 ரன்கள் குவித்து சாதனையுடன் தொடரை வென்றது இந்திய அணி!
Virat Kohli, Anushka Sharma

நட்சத்திர பேட்டரான விராட் கோலிக்கு ஆஸ்திரேலியா சுற்றுப்பணயம் மோசமானதாகவே இருந்தது. ஏனெனில் ஒன்பது இன்னிங்ஸ்களில் வெறும் 190 ரன்களை மட்டுமே விராட் கோலியால் எடுக்க முடிந்தது. நவம்பரில் நடந்த பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்திருந்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் போது, ​​குறிப்பாக ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து வீச்சுகளுக்கு எதிராக கோலியின் போராட்டங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், டெல்லி கிரிக்கெட் சங்கம் (டிடிசிஏ) ரஞ்சி டிராபியின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான சாத்தியக்கூறுகள் பட்டியலில் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் இரண்டு ஆட்டங்களில் எதிலும் பங்கேற்பது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
52 வயது பெண்மணி 150 கிமீ கடலில் நீந்தி சாதனை!
Virat Kohli, Anushka Sharma

இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முடிந்த போதெல்லாம் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் டெஸ்ட் வீரர்கள் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதை அடுத்து இது நடந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com