பாலஸ்தீனத்தில் எந்த இடமுமே பாதுகாப்பானவை இல்லை – ஐநா கவலை!

Rafa in Palestine
Rafa in Palestine

தற்போது பாலஸ்தீனத்தில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஃபாவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க இஸ்ரேல் திட்டம்போட்டது. அதற்கு ஐநா, பாலஸ்தீனத்தில் எந்த இடமுமே பாதுகாப்பானவை இல்லை என்று கவலை தெரிவித்துள்ளது.

காசா இஸ்ரேல் போர் ஒரு தொடர்க்கதையாகவே உள்ளது. சமீபத்தில் கூட, காசா ஆதரவுபெற்ற ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம் தெரிவித்தது. ஆனால், இஸ்ரேல் தரப்பு அதனைப் பற்றி வாயையே திறக்கவில்லை. அதேபோல், பாலஸ்தீனம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரானது. இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்குப் பதிவிட்டது. ஆனால், அமெரிக்கா பாலஸ்தீனத்திற்கு எதிராக வாக்குப்பதிவிட்டது. இருப்பினும், அதிக ஓட்டுகளுடன் பாலஸ்தீனம் ஐநாவின் உறுப்பினரானது.

இஸ்ரேல் மோசமான தாக்குதலில் ஈடுபடுவதால், அமெரிக்காவும் போரை கைவிடும்படிக் கேட்டுக்கொண்டது. ஆனால், இஸ்ரேல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நேற்று கூட ஐநா, மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தியது. இருப்பினும் ரஃபாவில் இஸ்ரேல் மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை 35,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். அதில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவார்கள். இப்படி இருக்கையில் எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ரஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
மாலத்தீவிலிருந்து அனைத்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றம்!
Rafa in Palestine

காசாவின் உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால், பாலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், "காசாவில் பாதுகாப்பான இடம் என சில இடங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இதில் உண்மை கிடையாது. மக்களை திசை திருப்பவே சில தகவல்கள் பரப்பப்படுகின்றன. காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானவை அல்ல" என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) ஆணையர் ஜெனரல் கவலையுடன் கூறியுள்ளார்.

இதற்கிடையே பாலஸ்தீன மக்களைக் காப்பதற்கு இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று ஐநா தொடர்ந்து கூறி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com