போருக்கு தயாராகும் வட கொரிய அதிபர்.. பதட்டத்தில் உலக நாடுகள்.

Kim Jong Un.
Kim Jong Un.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ள செய்தி, உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.  

வடகொரியா எப்போதுமே ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகும். உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் ஆபத்து நிறைந்த அணு ஆயுத சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வருகிறார். 

இந்நிலையில் வடகொரியாவுக்கு எதிரானவர்கள் தலைமையிலான மோதல்களை எதிர்கொள்ளும் வகையில் தன் ராணுவம் தயாராக இருக்குமாறு வடகொரிய அதிபர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் விதமாக அணு ஆயுத சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல ராணுவம் சார்பில் அணு ஆயுதக் கிடங்கு, உற்பத்தி தொழிற்சாலைகள், ராணுவ தடவாளங்கள் ஆகியவற்றை அதிகரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்:
வெள்ளை மாளிகைக்கு ஸ்கெட்ச்... சேட்டிலைட் அனுப்பிய வடகொரியா! 
Kim Jong Un.

வடகொரியாவின் இந்த அறிவிப்பு காரணமாக அவர்களுக்கு எதிராக செயல்படும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் அணுசத்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தென் கொரியாவுக்கு வருகை தந்திருந்தது. மேலும் வெடிகுண்டுகளை அதிக தூரம் சுமந்து செல்லும் விமானங்களும் சோதனை செய்யப்பட்டது. 

அமெரிக்கா வேண்டுமென்றே அணுசக்தி போரை தொடங்கும் நோக்கில் இப்படி செய்வதாக வடகொரியா குற்றம் சாட்டியிருந்த நிலையில், போருக்கு தயாராக இருக்குமாறு வடகொரிய அதிபர் கூறி இருப்பது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com