சிட்னியில் 13 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக்கூடாது என்ற விதி இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது 16 வயது வரை இந்த விதியை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போதெல்லாம், குழந்தைகள் பேச ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் போனை மட்டுமே உடனே கையில் எடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கான அக்கௌன்ட் இருக்கோ இல்லையோ சோஷியல் மீடியாவிலேயே முழுவதும் இருக்கிறார்கள். பல மணி நேரம் குழந்தைகள் சோஷியல் மீடியாவில் இருப்பதால், பல விளைவுகளை அவர்கள் சந்திக்கின்றனர்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில், அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மேலும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுக்கூட பரவாயில்லை, சிறு வயதில் அதிகம் போன் பயன்படுத்துவதால், தாங்கள் யார், என்ன ஆக ஆசை என்பது போன்ற கேள்விகளுக்கு கூட அவர்களால், பதில் சொல்ல முடியவில்லை. இதனால், Identity development-ல் கூட சிக்கல் ஏற்படுகிறது.
11 வயது முதல் 15 வயது வரை மூளை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும். அந்த சமயங்களில் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றால், வாழ்க்கை முழுவதும் கஷ்டமாகிவிடும். அதுவும் சுயக்கட்டுப்பாடை கற்றுக்கொள்ள 20 வயது வரைக்கூட ஆகிவிடும்.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான், குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது என்ற விதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து இந்த வயதை உயர்த்தக்கோரியும், 16 வயது வரை யாரும் சமூக வலைத்தளம் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை கொண்டு வர கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முன்னர், தங்கள் குழந்தைகளிடம் போன் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? ஒன்னுமே புர்ல சார்! ஒருவேளை சொல் பேச்சு கேக்கமாட்டாங்களோ?