துபாயில் வாட்ஸப்பில் புதிய சேவை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது இந்த சேவை மூலம் வாட்ஸப்பில் நுகர்வோர் தங்களது புகார்களை பதிவிடலாம்.
இப்போது உலக மக்களின் முதன்மையான தகவல் பரிமாறும் தளம் என்றால் அது வாட்ஸப் தான். இப்போதெல்லாம் நெட் மட்டும் இருந்தால் போதும், ரீச்சார்ஜ் செய்யாமல், வாட்ஸப்பிலேயே மெசேஜ் செய்தும் கால் செய்தும் பேசிக்கொள்கின்றனர்.
குறிப்பாக இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போன் வைத்திருக்கிறார்கள் என்பதால், வாட்ஸப் செயலியை அனைவருமே பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. வாட்ஸப் செயலிக்கு பதிலாக அதற்கு இணையாக எந்த ஒரு செயலியும் இல்லை என்பதுதான் உண்மை.
இன்ஸ்டாவில் என்னத்தான் மெசேஜ் மற்றும் கால் செய்யும் வசதிகள் வந்தாலும், அது ஒரு சமூக வலைதளம் என்பதால், சிலர் பயன்படுத்துவது கிடையாது. குறிப்பாக சிறுவர்கள் பயன்படுத்த சில பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
இப்படி அனைவருக்கும் அனைத்திலும் உதவியாக இருக்கும் வாட்ஸப்பில் நாளுக்கு நாள் புது புது வசதிகள் கொண்டுவரப்படுகின்றன.
குறிப்பாக இந்தியா, ப்ரேசில், இந்தோனேசியா, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அந்தவகையில் தற்போது துபாயில்தான் ஒரு புது வசதி கொண்டுவரப்படுகிறது. அதாவது, பொதுமக்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிரான புகார்களை இனி வாட்ஸப் மூலமகாவே கொடுக்கும் வசதி வரப்போகிறது. இதனால், விரைவாக புகாரை அளித்து தீர்வுக் காண முடியும்.
துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் ஒரு பகுதியான துபாய் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நியாயமான வர்த்தக கழகத்தால் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த புகார் செயல்முறையை எளிதாக்க இந்த தளம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும்.
இதில் நுகர்வோர் தங்களது ஆவணங்களை பதிவிடலாம். அத்துடன் புகார் தொடர்பான கேள்விகளை கேட்கலாம். இதன்மூலம் கடிதங்களை விரைவாகப் பெற்று கடைக்காரர்களிடம் கொடுக்கலாம். அப்போதும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றால், தண்டனைகளை அவர்கள் எதிர்கொள்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.