விஞ்ஞானம் பெருகப் பெருக துரித உணவுகள் மற்றும் வேகமான வாழ்க்கை முறை ஆகியவை உடல் நல பாதிப்புகளை தந்து அதற்கேற்றார் போல் மருந்து மாத்திரைகளையும் தினமும் எடுத்துக் கொள்ளும் நிலைதான் இன்று பெருகி வருகிறது . 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே நிச்சயம் ஏதேனும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இன்று அதிக பேருக்கு உள்ளது .
அதிலும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் மருந்து மாத்திரைகளுக்கு என்று தனியே மாதாந்திர பட்ஜெட்டில் இடம் ஒதுக்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம். இனி அந்தக் கவலை கொஞ்சம் குறையும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் தொற்று நோய்கள் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான 30 மருந்துகளின் சில்லறை விலை இந்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மூலம் (National Pharmaceutical Pricing Authority) (NPPA) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலைகள் National Pharmaceutical Pricing Authority மூலம் Drugs (Prices Control) Order, 2013 சட்டத்தின் கீழ்நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இப்போது அறிவிக்கப்பட்ட விலைகள் GST இல்லாத அடிப்படை சில்லறை விலைகள் என்பது சிறப்பு.
விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள முக்கிய மருந்துகள் சில..
எம்பாக்ளிஃப்ளோரின்(Empagliflozin) ,சிடாக்ளிப்டின்(Sitagliptin) , மெட்ஃபார்மின் (Metformin,) (Metformin ER) , டெனெலிக்ளிப்டின்,(Teneligliptin) ,டபாகாளிஃப்ளோசின்(Dapagliflozin) உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அடோர்வாஸ்டாட்டின்Atorvastatin, , டெல்மிசார்டன்(Telmisartan) , மெட்டோப்ரோலல் (Metoprolol) உள்ளிட்ட இதய நோய் மருந்துகளுக்கும் விலை நிர்ணயிக்கப்படுள்ளது . நீரிழிவு மாத்திரையான வில்டாகிளிப்டின் (ildagliptin ), விட்டமின் 3, Vitamin D3 , Oral Solution, கால்ஷியம் மற்றும் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்(Vitamin Supplements) ஆகியவைகள் மீதும் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் உடல்நல மருந்துகள் ,வலி நிவாரணிகள் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல மருந்துகளின் தற்போதைய சந்தை விலையை விட புதிய விலைகள் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெறும் நன்மைகள் :
புதிய விலை நிர்ணயத்தால் நீண்ட கால உடல் நல பாதிப்புகளுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருத்துவ செலவு குறையும் . குறிப்பாக இந்த நடவடிக்கையின் மூலம் மருந்துகள் அவசியம் தேவைப்படும் பாதிப்புகளான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், தொற்றுநோய்கள் மற்றும் பெண்கள் உடல்நல சிகிச்சைகளுக்கான மருந்துகள் மலிவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்துகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க உதவும். குறிப்பாக குறிப்பிட்ட விலையை விட அதிக விலை வசூலிப்பதை கட்டுப்படுத்தும். மருந்து வாங்கும் பொருளாதார நிலை இல்லாதோர் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
மருந்துகளின் விலை குறைகிறது என மகிழ்ச்சி கொள்ளாமல் நோயற்ற வாழ்வுக்கு என்ன வழி என்பதை அறிந்து அதன்படி நமது வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொண்டால் மருந்துகளின் செலவை முற்றிலும் குறைக்கலாம்.