அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும்...

வடகொரிய அதிபர் கிங் ஜாங்
அணு ஆயுதங்களை அதிகளவில் தயாரிக்க  வேண்டும்...

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் அதன் நட்பு நாடுகளின் மிரட்டல்களையும் சமாளிக்க வேண்டுமென்றால் கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், அணு ஆயுதங்களும் அதிகளவில் நாம் தயாரிக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிங் ஜாங் தெரிவித்துள்ளார்.

 ஆளும் உழைப்பாளர் கட்சிக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வடகொரியா அதிபர் கிங் ஜாங் கலந்து கொண்டு பேசினார்.

 அவர் பேசும்போது, நாட்டின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் கட்டிக்காக்கவும் ராணுவ பலத்தை நாம் அதிகரிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது. 

நம்மை (வடகொரியாவை) தனிமைப்படுத்தி அடக்கி ஒடுக்க துடிக்கும் அமெரிக்கா, மற்றும் அண்டை நாடான தென்கொரியாவை நாம் சமாளிக்க அணு ஆயுதங்கள் நமக்கு தேவைப்படுகிறது. இதுவரை என்றும் இல்லாத அளவுக்கு தென்கொரியாவில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.   நாட்டின் அணு சக்தியை வலுப்படுத்தவும் எதிரி நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுசக்தி ஆயுதங்களையும் நாம் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கிங் ஜாங்கூறினார்.

கடந்த வாரம் வடகொரியாவின் டிரோன் ஏவுகணைகள் தென்கொரிய வான் பகுதியில் ஊடுருவியதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் வடகொரியா அதிபர் இவ்வாறு கூறியிருப்பது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளையும், 3 நாசகார ஏவுகணைகளையும் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com