அமேரிக்காவிற்கு பயந்து ரஷ்யாவில் அணு ஆயுத பயிற்சி!!

Vladimir Putin
Vladimir Putin
Published on

ரஷ்யா உக்ரைன் போரின் தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா தாக்குதலில் ஈடுப்படுமோ என்று ரஷ்யா அணு ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுமே போரை நிறுத்த முன்வருவதாக தெரியவில்லை. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது. தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா அவ்வபோது சில கிராமங்களையும் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில்கூட மேலும் இரண்டு கிராமங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து சமீபத்தில் ரஷ்யாவின் படையில் வடகொரியாவின் 10 ஆயிரம் வீரர்கள் இணைந்தனர் என்ற செய்திகள் வந்தன. இதனால் போர் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ரஷ்யாவை தாக்கப்போகிறது என்று ரஷ்யா சந்தேகிக்கிறது. அதனால், ரஷ்யாவில் அணு ஆயுத பயிற்சிக்கு விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டார்.

இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், உலகில் இருக்கும் அணு ஆயுதங்களில் 88 சதவிகிதம் அளவு ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு 100 அணு ஆயுதங்களே போதும். இதில் முக்கால்வாசி ராணுவம் மற்றும் போர்க்கப்பல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் - பூங்காவாகப் போகும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம்!
Vladimir Putin

இஸ்ரேல் மற்றும் வடகொரியாவை தவிர மற்ற அனைத்து நாடுகளுமே 100 அணு ஆயுதங்களுக்கு கூடுதலாகவே வைத்திருக்கின்றன. பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களின் உற்பத்தியை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இஸ்ரேல் மற்றும் வடகொரியா மட்டுமே அந்த விதியை பின்பற்றி வருகிறது. இந்தியா போன்ற மற்ற நாடுகள் அணு ஆயுதங்களின் உற்பத்தியை குறைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில், ரஷ்யா மட்டும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தியது என்றால், போர் உச்சக்கட்டத்திற்கு சென்றுவிடும். அதேபோல் உக்ரைனின் நட்பு நாடானா அமெரிக்காவும் பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது. ஒருவேளை இந்த அணு ஆயுத போர் மூன்றாம் உலகப்போருக்குக்கூட வழி வகுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com