உலகின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம்.. சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

The number one richest family in the world.
The number one richest family in the world.
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தற்போதைய நிலையில் உங்களிடம் உலகிலேயே பணக்காரர் யார் எனக் கேட்டால் பில் கேட்ஸ், ஜெஃப் பெஸாஸ், எலான் மஸ்க் என பலருக்கு தெரிந்தவர்கள் பெயரையே கூறுவீர்கள். அதே நேரம் இவர்களின் ஒட்டுமொத்த குடும்ப சொத்தை ஒன்றிணைத்துப் பார்த்தால் இவர்களின் சொத்து மதிப்பு முதலிடத்தில் இருக்காது. 

ஆனால் உலகிலேயே மிக அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை வைத்திருக்கும் குடும்பமாக சவுதியின் சவுத் குடும்பம் தான் இருந்து வருகிறது. இந்த குடும்பமே சவுதியை ஆட்சி செய்கிறது. இவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 116 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட அதிகமாகக் கூட அவர்களுக்கு சொத்துக்கள் இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இவர்களது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.4 ட்ரில்லியன் என சொல்லப்படுகிறது. இதுவே தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என சொல்லப்படும் எலான் மஸ்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 251 பில்லியன் டாலர்கள் மட்டுமே. பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 119 பில்லியன் டாலர்கள். சவுத் குடும்பத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த செல்வமும் சுமார் 2000-க்கும் அதிகமான உறவினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

 இவர்களது சொத்துக்களின் பெரும்பாலான பகுதி சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் வளம் மூலமாகவே பெறப்பட்டது என கூறப்படுகிறது. இதன் மூலமாக சவுதி அரசாங்க குடும்பம் நாம் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் அனைத்துமே தங்கம்தான். தங்கக் கழிவறை, தங்க விமானம் என பெரும்பாலும் தங்கத்திலேயே வாழ்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
இளம் வீரரான சுப்மன் கில்லின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
The number one richest family in the world.

ஒவ்வொரு ஆண்டும் இவர்களது சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இவர்கள் வைத்திருக்கும் பணம் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள் என கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள்.