

தமிழக விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்.
தற்போதைய தலைமைச் செயலகம் 400 ஆண்டுகள் பழமையானது. ஓமந்தூரில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாட்டின் பபெருமையாக இருந்தாலும், புதிய தலைமைச் செயலகம் அவசியம். இதனால் நவீன வசதிகளுடன் தலைமைச் செயலகம் கட்டப்படும். இது ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.