

தமிழக விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னையில் அமைக்கப்பட உள்ள ஒலிம்பிக் நகரத்தில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தக் கூடிய வகையில் நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்கும் வீரர் வீராங்கனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்நிலையில் தமிழக வீரர்களை சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று சாதனைப் படைக்கும் வகையில் தமிழக விளையாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் அளவிற்கு தயார்படுத்துவோம் என தெரிவித்திருந்தார்.
அதற்கேற்ப தற்போது சென்னையில் தமிழக ஒலிம்பிக் நகரம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் திறமையிருந்தும் பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் வீரர்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்:
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தில் உலகத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், அதற்குரிய நவீன ஊட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். ஃபார்முலா 1, ஃபார்முலா2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார் பந்தயப் போட்டிகளை நடத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கி சர்வதேச தரத்திலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடங்ளை அமைப்பதன் மூலமாக சுற்றுலா, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளையும் மேம்பட வாய்ப்புள்ளது.
புதிய தலைமைச் செயலகம்:
தற்போதைய தலைமைச் செயலகம் 400 ஆண்டுகள் பழமையானது. ஓமந்தூரில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாட்டின் பெருமையாக இருந்தாலும், புதிய தலைமைச் செயலகம் அவசியம். இதனால் நவீன வசதிகளுடன் தலைமைச் செயலகம் கட்டப்படும். இது ரூ.1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அவ்வப்போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் விஜய். முதல்வரின் அறிவிப்புகளில் இருந்து, விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர முடிகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் அடுத்து வரும் விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்லும் அளவிற்கு முன்னேறியிருப்பார்கள் என தமிழக அரசு அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையஙகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு மேம்படுத்தப்படும்.
தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்று குவிக்கும் ஒருங்கிணைத்த விளையாட்டு மையமாக இது திகழும். 110 விதியின் கீழ் முதல் விஜய் இன்று அறிவித்த அறிவிப்புகள் அனைத்துமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன