ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் மற்றும் ஓ.டி.டி. தளங்களில் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.இந்த வாரம் எந்த எந்த திரைப்படங்கள் வெளியாகிறது பார்க்கலாம் வாங்க..
1. காந்தா
மலையாள நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் காந்தா தமிழ் , மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் துல்கருக்கு ஜோடியாக பாக்ய ஶ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரைப்பட இயக்குனரான அய்யாவிற்கும், இப்போது சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் அவரது ஆதரவாளரான சந்திரனுக்கும் இடையிலான ஈகோ போட்டியைச் பற்றிய கதை. இந்த திரைப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
2. கும்கி 2
இது ஏற்கனவே வெற்றி பெற்ற கும்கி படத்தின் பெயரில் வந்தாலும் அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக இல்லை. இந்த திரைப்படத்தில் மதி , அர்ஜூன் தாஸ் , ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்றி சிறுவன் வளர்த்து வருகிறான். இருவருக்கும் வலுவான பிணைப்பு நிலவுகிறது. யானை மனிதன் இடையேயான அன்பை பற்றிய கதை இது. இதை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.
3. மதராஸ் மாஃபியா கம்பேனி
ஆனந்தராஜ், சம்யுக்தா சண்முகநாதன். ஆகியோர் நடித்த திரைப்படம் இது. எந்த குற்றம் செய்தாலும் தன் மேல் புகார் வராத அளவுக்கு ஒரு மோசமான குற்றவாளியான பூங்காவனத்திற்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் படத்தின் திரைக்கதை. இந்த திரைப்படத்தை ஏ.எஸ் முகுந்தன் இயக்கியுள்ளார்.
4. கிணறு
பல சர்வதேச விழாக்களில் விருதுகளை வென்ற இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது. நான்கு சிறுவர்கள் அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு துன்புறுத்தப் படுகிறார்கள்.
அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். அதைப் பற்றிய கதை இது. புதுமுகங்கள் கொண்ட இந்த திரைப்படத்தை ஹரிகுமாரன் இயக்கியுள்ளார்.
5. ஆட்டோகிராஃப் (மறு வெளியீடு)
சேரன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இது. செந்தில் என்னும் மனிதனின் வாழ்க்கையில் மலர்ந்த நகைச்சுவை மிகுந்த பள்ளிப்பருவ காதல் , உணர்ச்சி வசமான கல்லூரி காதல் , காதல் தோல்வி , வறுமை , வேலை வாய்ப்பின்மை , ஊக்கம் கொடுத்து முன்னேற உதவும் தோழி , இறுதியில் வரப் போகும் மனைவி ஆகிய பெண்களை சுற்றி வரும் கதை இது.சேரன், கோபிகா, சினேகா, கனிகா , ராஜேஷ் ஆகியோர் நடித்த திரைப்படம் இது.
ஓடிடியில் நவ 14 அன்று வெளியாக உள்ள திரைப்படங்கள் .
1.டியூட்
பிரதீப் மற்றும் மமீதா பைஜூ நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்ற டியூட் திரைப்படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
2 .ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்
ஏற்கனவே வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் பல பாகங்களில் இதுவும் ஒன்று . டைனோசர் மற்றும் சாகசம் நிறைந்த கதைக்களம் கொண்ட திரைப்படம் இது. இதை ஜியோஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.
3.தெலுசு கடா
சித்து ஜொன்னலகட்டா, ராசி கன்னா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'தெலுசு கடா'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.