
தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் கொரோனோவோடு சேர்ந்து பல்வேறு காய்ச்சல்களும் பரவி வருகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கொரோனா அதிகரித்துவரும் வேளையில் அதனோடு பருவகால காய்ச்சல்கலாக எச்1என்1 என்கிற இன்புளுயன்சா வைரஸ் வகையை சேர்ந்த பன்றிக்காய்சலும் , டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்களை அமைக்க முடிவு செய்து வருகிறது தமிழக அரசு.
பருவகால மாற்றங்கள் ஏற்படும் நேரங்களில் இந்தவகை காய்ச்சல்கள் இயல்பாக வருவது தான். ஆனால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.