
தன்னிடமுள்ள 5 டிரில்லியன் டாலர் (சுமார் ₹437.2 லட்சம் கோடி) மதிப்பிலான அரிய வகை கனிமங்கள் மற்றும் கனிம வளங்களை உலகளாவிய முதலீட்டுக்காகத் திறக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, சீனா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் தனது 3 முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அரிய வகை கனிமங்கள் மற்றும் கனிம வளங்களை உலக முதலீட்டிற்காகத் திறக்க உள்ளது.
இதில் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கனிம மற்றும் அரிய வகை கனிம வளப் பகுதிகளையும் மாகாணங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ஒரே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.ஆனா, இதைச் செய்யுறதுக்கெல்லாம் சட்டத்தை மாத்தணும்.
ஏன்னா, இப்ப இருக்கிற 18-வது சட்டத் திருத்தப்படி, இயற்கை வளங்களோட அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்குத் தான் இருக்கு.
ஏலம் விடுறது, அனுமதி வாங்குறது, பாதுகாப்பு அனுமதி வாங்குறதுனு எல்லாத்தையும் ஈஸியாக்கத்தான் இந்த மாற்றத்தைச் செய்யப் போறாங்க.
இந்தக் கனிமங்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு மிகவும் முக்கியமானவை.
அமெரிக்க அதிகாரிகள் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கனிம முதலீட்டு மாநாட்டிலும் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா - சுரங்கத் திட்டங்களில் ஆர்வம்: பலூசிஸ்தானின் வடக்கு மற்றும் கைபர் பக்துன்க்வாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சுரங்கத் திட்டங்களில் அமெரிக்கா முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா - கில்கிட்-பல்டிஸ்தானில் ஆய்வு: முதல் கட்டமாக, பாகிஸ்தானின் வடக்கில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் இருக்கும் கனிமங்களை ஆய்வு செய்வதற்கான உரிமை சீனாவுக்குக் கிடைக்கிறது.
சீனாவின் போக்குவரத்து திட்டம்: இது தவிர, பாகிஸ்தானின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் 2,000 மைல் நீளமுள்ள ஒரு பிரம்மாண்டமான சாலை அமைக்கும் பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத செம்பு-தங்கச் சுரங்கங்களில் ஒன்றான ரெகோ டிக் (Reko Diq) சுரங்கத்திற்காக சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் அரசு, அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், முதலீட்டாளர்களுக்காக, அனைத்து நடைமுறைகளையும் ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் ஒரு "ஒன்-விண்டோ" (one-window) முறையை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வரத் தொடங்கி உள்ளன.
பாகிஸ்தானிடம் நிலக்கரி, செம்பு, தங்கம், இரும்புத் தாது, குரோமைட் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உட்பட பல வகையான கனிம வளங்கள் உள்ளன. மேலும், உலகின் இரண்டாவது பெரிய உப்பு கையிருப்பு மற்றும் ஐந்தாவது பெரிய செம்பு மற்றும் தங்கப் படிவுகளும் பாகிஸ்தானில் உள்ளன.
இந்தக் கனிமங்கள் பலூசிஸ்தான், பஞ்சாப், சிந்து மற்றும் வடக்கு மலைப் பகுதிகள் என அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளன.
பாகிஸ்தானின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கூட்டாக மேம்படுத்துவதற்கான கூட்டாண்மையை அமெரிக்கா இறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று டிரம்ப், "பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இணைந்து அந்த நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்காக ஒரு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம்" என்று எழுதியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குஜெல்மேன் (Michael Kugelman), பாகிஸ்தானின் முக்கியமான கனிமங்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற பகுதிகளில் இருப்பதால், பாகிஸ்தானால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அமெரிக்காவின் ஆர்வம் நீண்ட காலம் நீடிக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.