ஈரான் போர் எதிரொலி: பாகிஸ்தானில் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள்..!

pakistan
pakistan
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

அமெரிக்கா ஈரான் போரினால் , போரில் பங்கேற்காத பல நாடுகளும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஈரான் நாட்டை ஒட்டியுள்ள நமது அண்டை நாடான பாகிஸ்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரின் மூலம் பூகோள ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கி வருகிறது. 

பாகிஸ்தானில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு மின்சார உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும், அதிகப்படியான மின்சார தேவையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.

புதிய விதிமுறைகளின் படி, அனைத்து வணிக வளாகங்களும் , கடைகளும் இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும். உணவகங்கள் , திருமண நிகழ்ச்சிகள், மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இரவு 10 மணி வரையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாக் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : சொத்து விவர குளறுபடி - செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..!
pakistan
logo
Kalki Online
kalkionline.com