#BIG NEWS : சொத்து விவர குளறுபடி - செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..!

Sengottaiyan
Sengottaiyan
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on

தமிழ்நாடு சட்ட சபை தோ்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.இதில் பல முக்கிய பிரபலங்களின் மனுக்கள், எதிர்த்தரப்பினரின் ஆட்சேபனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், கோபிச்செட்டிபாளையத்தில் தவெகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.ஏ செங்கோட்டையன் அவர்களின் வேட்பு மனுவில் குறைகள் இருப்பதாக அதிமுக கட்சியை சோ்ந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.சொத்து விபரம் சரியாக தாக்கல் செய்யப்படவில்லை என ஆட்சேபிக்க அவரது மனு மறுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் புதிதாக் கட்டியுள்ள வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞரால் சான்றொப்பம் இடப்பட்டவை என்றும் கூறி அ.தி.மு.க-வினர் புகார் அளித்துள்ளனர்.இந்தப் புகார்களின் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கோட்டையனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கே.ஏ செங்கோட்டையன் எம் ஜி ஆா் கட்சி துவங்கிய நாளில் இருந்து அதிமுகவில் கொடிகட்டிப் பறந்த ஆற்றல் திறன் கொண்டவர். அதேபோல ஜெயலலிதா ஆட்சியிலும் அவர்தான் முதன்மையானவர். அவர் தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் தேர்தலில் நின்று தோல்வியே இல்லாமல் வெற்றிவாகை சூடியவர்.அவர் ஏன் தனது வேட்பு மனுவை இந்த முறை சரிவர தாக்கல் செய்யாமல் இருந்தாா் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தற்சமயம் நடக்கும் தேர்தல் அவருக்கு புதியதல்லவே!அவர் தவெகவில் இணைந்தவுடன் கட்சி கொஞ்சம்பலம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் அரசியலில் பழுத்த பழமாக விளங்கிவரும் கே ஏ செங்கோட்டையன் அதீத நம்பிக்கையில் இப்படி எல்லாம் நிகழ்வுகள் நடக்கும் என்பதை எதிா்பாா்க்காமல் அலட்சியமாக இருந்தாரோ என நினைக்கவே தோன்றுகிறது. இவரே இப்படி என்றால் த.வெ.க புதுமுகங்களின் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதும் கேள்விக்குறிதான், அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்களின் நிலையே இப்படித்தானோ என நினைக்கவே தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் நெல்லை பிரச்சாரத்திற்கு அனுமதி! 51 நிபந்தனைகள் விதிப்பு!
Sengottaiyan
logo
Kalki Online
kalkionline.com