அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சமயத்தில், ட்ரம்பைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் வருவது போல், அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் வரும். ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த வருடம் இறுதிக்குள் முடியவுள்ளது. ஆகையால், வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் களமிறங்கவுள்ளார். அதேபோல், அவரை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார். ட்ரம்பிற்கு சமீபக்காலமாக இடையூறுகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.
அப்படித்தான் கடந்த மாதம் 14ம் தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ட்ரம்பின் காதை உரசி தோட்டா சென்றது. இதனால், நூழிலையில் அவர் உயிர் தப்பினார்.
டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.
அந்த சமயத்தில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ட்ரம்ப். இந்தக் காரணத்தினால்தான், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று சில வாரங்களுக்கு முன்பு இந்த தகவல் வந்தது.
இப்படியானநிலையில்தான் அமெரிக்காவில் அரசியல் படுகொலைகளை செய்ய திட்டமிட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை உள்நாட்டு உளவுத்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் அவரை விசாரணை செய்தனர். அதாவது கைதான ஆசிப் மெர்ச்சன்ட் டொனால்ட் டிரம்ப் உட்பட பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை கொல்லும் சதித்திட்டத்துன் அமெரிக்கா சென்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவருக்கு ஈரானுடனும் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பல காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையில், ஆசிப் மெர்சண்ட் அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன் ஈரான் சென்றிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இவர் அமெரிக்காவிம் அரசியல் பிரபலங்களை கொல்வதற்காக கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளி வந்திருக்கிறார். பின் நியூயார்க்கில் இரண்டு கொலையாளிகளுக்கு முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்கா டாலர்களை கொடுத்திருக்கிறார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பெயர்களை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.
இந்தத் திட்டங்களுடன் வந்தவரைதான் உளவுத்துறை கைது செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.