பழனியில் கட்டுக்கடங்காத கூட்டம்! வரிசையில் நின்றவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பு; வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் மயங்கி விழுந்ததால் பதற்றம்.
Palani temple
Palani temple crowd x
Updated on

முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருத்தலமாக போற்றப்படுவது பழனி. தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டதால், வழக்கத்தை விட கூட்டம் பல மடங்கு கூறியுள்ளது. வார இறுதி நாட்களுடன் மொஹரம் பண்டிகையும் வெள்ளிக் கிழமையில் சேர்ந்து கொண்டது. தொடர் விடுமுறை காரணமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

​அதிக அளவில் மக்கள் கூடியதால் கோவிலுக்கு செல்லும் வழிகளில் ஏராளமான இடங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. மலைக்கு ஏறும் படிக்கட்டுகள் , ரோப் கார் சேவைகள், மின் இழுவை ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பக்தர்களின் கூட்டம் ஏராளமாக அலைமோதி கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக ₹100 சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கூட்டம் மிகுதியால் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்தே சன்னதிக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், போதுமான அளவு காற்று வசதியும் கிடைக்காததாலும் மூச்சு திணறிய ஒரு சில பக்தர்கள் அடுத்து அடுத்து மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் பழனி கோயிலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​

கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பலரும் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். குடிநீர் , காற்றோட்ட வசதி, வரிசைகளில் போதுமான அளவில் இட வசதி , அவசரகால மருத்துவ உதவி , வெயில் தாக்கம் அதிகரிக்கும் இடங்களில் மேற்கூரைகள் ஆகியவற்றை அமைத்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர் விடுமுறை காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்திருக்க வேண்டும். இதற்காக ஆன்லைன் முன்பதிவு மற்றும் விரைவான தரிசனத்திற்கு ஏற்பாடு , பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

People in Palani temple
palani temple heavy crowdX

அதிக கூட்டம் காரணமாக இட நெருக்கடி, நெரிசல் போன்றவை ஏற்படும் என்பதை வைத்து கணக்கில் கொண்டு, அது போன்ற நேரங்களில் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பக்தர்களை பாதுகாப்போடு தரிசனம் செய்ய வழிமுறைகளை வகுக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் , உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் , மாற்றுத்திறனாளிகள் , சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு தனியாக பிரத்தியேக வரிசைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே பழனி கோவிலில் பக்தர்கள் குவிந்த விஷயம் , உள்ளூர் நிர்வாகத்திற்கு ஏற்கனவே தெரியும் என்பதால், அவர்கள் அப்போதே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்து இருந்தால், தற்போது நெரிசலினால் மக்கள் பாதிப்பு அடையாமல் இருந்திருப்பார்கள்.

பக்தர்களும் தொடர் விடுமுறை காலங்கள் , மற்றும் பண்டிகை காலங்களில் கோயிலுக்கு செல்வதால் , இது போன்ற நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அதனால் , விடுமுறை காலங்கள் அல்லாத நாட்களிலும் கோயிலில் தரிசனம் செய்ய செல்லும் போது , இது போன்ற நெருக்கடிகள் எதுவுமின்றி மனநிறைவோடு கோயிலில் வழிபாடு செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலில் மூழ்கடிக்க நாசா திட்டம்! பேராபத்தில் பாயிண்ட் நெமோ?
Palani temple
logo
Kalki Online
kalkionline.com