பரத் கல்யாண்
பரத் கல்யாண்

பேலியோ டயட் நல்லதா? ஆபத்தானதா?

Published on

கன்னட திரையுலகில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பரத் கல்யாண்.

2007-ம் ஆண்டு, சிருங்காரம் எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிக்க துவங்கினார். இதனை தொடர்ந்து வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போதும் விஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா , கனாக் காணும் காலங்கள் ஆகியதொடர்களிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஜமீலா என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.

இவரின் மனைவி பிரியதரஷினி வயது 43. இவர் உடல் எடையைக் குறைக்க பேலியோ டயட் எனும் உணவுக்கட்டுப்பாடு முறையைப் பின்பற்றி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இதனால் தீவிர உடல் பாதிப்புக்குள்ளான இவர் நேற்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

பேலியோ டயட்டை பொறுத்தவரை காய்கறிகள், நட்ஸ், இறைச்சி ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் உணவுகள், பழங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள் .

பரத் கல்யாண் - பிரியதரஷினி
பரத் கல்யாண் - பிரியதரஷினி

தற்போது ப்ரபலமான இந்த பேலியோ உணவு முறையைபலரும், இந்த டயட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேலியோ பின்பற்றுபவருடையே சில குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

பேலியோ போன்ற உணவு முறைகளை பின்பற்றுபவர்கள் தங்கள் உடல் நிலையை அதன் மெட்டபாலிசத்தை தரோவாக பரிசோதித்துக் கொண்டு அதன் பிறகு இந்தமாதிரி பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம் என டயட் ஆலோசகர்கள் கருத்துதெரிவிக்கிறார்கள்.

மேலும் தகுந்த உணவியல் ஆலோசகரின் வழிகாட்டுதல்படியே டயட் உணவு குறித்த வழிமுறைகளை மாற்றம் செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com