

இராமேஸ்வரம் பாம்பனில் மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. இந்தக் கூறல் மீன்கள் பொதுவாக சாப்பிடுவதற்கு பயன்படவில்லை என்றாலும், அதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்களும், பலன்களும் எக்கச்சக்கமென்றே கூறலாம். இந்த மீன்கள் இவ்வளவு விலைக்குப் போக என்ன காரணம்? மற்றும் இதன் பல்வேறு நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கூறல் மீன் என்றால் என்ன?
கூறல் மீன் என்பவை, மீன் இனங்களிலேயே அரிதாக காணப்படும் மீன் இனமாகும். பெரும்பாலும் இந்த மீன்கள் அரிதாக இந்தோ பசிபிக் போன்ற கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக பவளப்பாறைகள் காணப்படும் இடங்கள் இம்மீன்கள் காணப்படுகின்றன. பல்வேறு காரணங்களால் இம்மீனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.
இந்த மீனை கருத்திட்டு கத்தாளை என்றும் ஒரு சிலர் பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்த மீன் உணவுக்காக யாரும் பயன்படுத்த மாட்டார்கள். இந்த மீன் முழுக்க முழுக்க மருத்துவ பயன்பாடுகளுக்கும், பிற இதர பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அப்புறம் என்ன இந்த மீனின் விலை இவ்வளவு இருக்கு? என்று கேட்டால், அந்த மீனில் மருத்துவ பயன்கள் அதிகம் உள்ளதால் இந்த விலை போக காரணமாகிறது. மீன் இனங்களிலேயே, இதுவும் ஒரு வகையான விலை உயர்ந்த மீன் இனமாக கருதப்படுகிறது.
கூறல் மீனின் பயன்கள் மற்றும் வர்த்தகம் :
கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் உள்ள நெட்டி எனப்படும் ரப்பர் குழாய் போன்ற, காற்றுப்பை என்று அழைக்கப்படும், ஒருவித உறுப்பானது பல மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. இந்த காற்றுப்பையை கொண்டு, மருந்துகள் தயாரிக்கவும், அதற்கான மூல பொருள், மருந்துகளின் மூலப் பொருள்களை தயாரிக்கவும் தேவைப்படுகிறது. அதேபோல் பல்வேறு மருந்துகளைத் தயாரிக்க இது ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் காற்று பைகளை மீனவர்கள் பண்ணா என்று குறிப்பிடுவார்கள். மருத்துவத்தை தாண்டி பிற பயன்பாடுகளுக்கும் இந்த மீன்கள் பயன்படுகிறது.பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்கள் போன்றவற்றை கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த மீனை கடல் தங்கம் என்றும் கூறுவார்கள்.ஆஸ்திரேலியாவில் "Black jewfish" என்றும் அழைக்கப்படுகிறது.
இதனால் இந்த மீன்களின் ஏற்றுமதியானது மேலை நாடுகளுக்கு அதிக அளவில் நடைபெறுகிறது. அதேபோல் நம் நாட்டு சந்தைகளிலும் இந்த மீனின் விலை கிலோ ஒன்றுக்கு 3600 முதல் 4000 வரை விலை போகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பாம்பன் அருகே உள்ள மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. அதில் ஒரு மீன் 22 கிலோவும், மற்றொரு மீன் 24 கிலோவும். மொத்தம் 46 கிலோ எடை கொண்ட இரண்டு கூறல் மீன்கள் கிடைத்தன. இதனால் இதன் விலையானது, கிலோ 3600 என்ற வீதத்தில், மொத்தமாக 46 கிலோ இருந்ததால், ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு 600-க்கு விலை போனது. இதனால் அந்த மீனவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.