கசல் இசையின் சகாப்தம் பங்கஜ் உதாஸ்!

Pankaj Udhas
Pankaj Udhas
Published on

இந்திய இசை உலகில் தனித்துவமிக்க கசல் பாடல்களின் ஆதிக்கம் அதிகம். அரேபியாவில் உருவான கவிதை வடிவமான கசல் முகலாயர்கள் வருகையால் இந்தியாவில் பிரபலமானது. கசல்கள் காதலை மையமாகக் கொண்ட கவிதைகள். காதல் மற்றும் காதலால் உருவாகும் வலி, பிரிவு, சோகம் ஆகியவையே கசல் பாடல்களின் அடிப்படை.


ஹிந்தி திரையுலகில்  உருகவைக்கும் கசல் பாடல்களை பாடி மக்கள் மனதை கவர்ந்த மிகஞ்சிறந்த பாடகர்தான் பங்கஜ் உதாஸ். குஜராத்தில் உள்ள ஜெட்பூரில் பிறந்த பங்கஜ் பாலிவுட் சார்ந்த கசல் பாடகர்களுள் மிக உயரமான இடத்தைப் பிடித்தவர். சிகரங்களைத் தொட்டவர். கடந்த 2018ம் ஆண்டு வரை அவர் ஏராளமான திரையிசை மற்றும் கசல் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்

Pankaj Udhas
Pankaj UdhasImg Credit: The Sunday Guardian

‘கசல் உலகின் முடிசூடா மன்னன்’ என புகழப்பட்ட இவர்,
1980-ல் வெளியானஆஹத்’ (Aahat) ஆல்பம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கி 2011-ம் ஆண்டு வரை  50 ஆல்பம் பாடல்களை பாடியுள்ளது சிறப்பு. ‘நாம்’ (NAAM) இந்திப் படத்தில் வெளியானசிட்டி ஆயி ஹை’ (Chitti Aayi Hai) பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. ‘காயல்’, ‘மொஹ்ராபடங்களில் இவர் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 'சுப்கே சுப்கே’, ‘கஜ்ரே கி தரில்உள்ளிட்ட பல படப் பாடல்கள் இன்றும் அனைவரையும் ஈர்க்கின்றன.

புகழ்பெற்ற கசல் பாடகராக சர்வதேச அளவில் அறியப்பட்டு வந்த இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பத்மஸ்ரீ விருது அளித்து பெருமைப்படுத்தினார்.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வந்த இவர் வயது மூப்பு காரணமாக  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதி (திங்கட்கிழமை) காலமானார். இந்தத்ற தகவலை அவரது மகள் நயாப் உதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விஜய்யை அரசியலுக்கு வரத் தூண்டியது யார்?
Pankaj Udhas

பங்கஜ் அவர்கள் தனது 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட  நீண்ட இசை பயணத்தில் பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 1994ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் லுபாக் டெக்சாஸின் கௌரவ குடியுரிமையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகளை நடத்தி  புகழ்பெற்ற பங்கஜ் உதாஸ் மறைவையொட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''பங்கஜ் உதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். கஜல் மூலம் நேரடியாக நமது ஆன்மாவுடன் பேசியவர் பங்கஜ் உதாஸ். இத்தனை ஆண்டுகளில் அவருடன் உரையாடிய தருணங்களை நினைத்துப்பார்க்கிறேன். அவரின் மறைவு இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

காலங்கள் கடந்தாலும் கசல் பாடல்களில் ஒலிக்கும் தனது இனிய குரலினால் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்வார் பங்கஜ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com