விஜய்யை அரசியலுக்கு வரத் தூண்டியது யார்?

MGR Vijay
MGR Vijay
Published on

- மகாதேவன் ராமச்சந்திரன்

நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வரத் தூண்டியவர் அப்துல் கலாம் என்ற விமர்சனம் உண்டு. உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கலாம் சொன்னாராம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரத் தூண்டியவர் அவரது தந்தை எஸ். ஏ.சந்திரசேகரன் என்கிறார்கள்.

அரசியலுக்கு விலையாக சினிமா வாழ்க்கையைத் தருவதாக அறிவித்து இருக்கிறார் விஜய்.

விஜய் இன்னொரு எம். ஜி. ஆர். இல்லை!

எம்.ஜி.ஆரின் சினிமா புகழ் 50 சதவீதம். அவர் தி.மு.க.வில் பணியாற்றிய அரசியல் பின்புலத்தின் பலம் 50 சதவீதம். இரண்டும் சேர்ந்து, அவர் புதுக் கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளில், அவரை ஆட்சியைப் பிடிக்கச் செய்தது.

என்.டி.ராமராவின் சினிமா புகழ் 50 சதவீதம். அவர் பல திரைப் படங்களில் கடவுள் வேடம் அணிந்தார். அதனால், ஆந்திராவின் பெரும்பான்மை சினிமா ரசிகர்கள் அவரை கடவுளாக கற்பனை செய்தனர். அந்த பின்புலம் அவருக்கு 50 சதவீதம் பலம். இரண்டும் சேர்ந்து, அவர் புதுக் கட்சி தொடங்கிய 18 மாதங்களில் அவரை ஆட்சியைப் பிடிக்கச் செய்தன.

சிரஞ்சீவிக்கு சினிமா புகழ் என்ற 50 சதவீத பலம் மட்டும் இருந்தது. வேறு புகழ் பின்புலம் எதுவும் இல்லை. அதனால், அவர் தொடங்கிய புதுக் கட்சி 18 தொகுதிகளில் மட்டும் ஜெயித்தது. அவரால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

பிரேம் நசீருக்கு சினிமா புகழ் என்ற 50 சதவீத பலம் மட்டும் இருந்தது. வேறு புகழ் பலம் இல்லை. கம்யூனிசம் காலூன்றிய கேரளாவில், அரசியலில் அவரால் ஜொலிக்க முடியவில்லை.

'விஜய்'க்கு சினிமா புகழ் என்ற 50 சதவீத பலம் மட்டும் உள்ளது.

அவர் அரசியலில் இன்னொரு 'சிரஞ்சீவி', இன்னொரு 'எம்.ஜி.ஆர்' இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com