பப்புவா நியூ கினியா: பழங்குடி மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 60 க்கும் மேற்பட்டோர் பலி!

பப்புவா நியூ கினியா
பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியில், எங்கா மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில், இரு பழங்குடியின மக்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பப்புவா நியூ கினியாவில் 800க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் 300 க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு மலை சார்ந்த பகுதி என்பதால் பழங்குடி மக்களுக்கு இடையே இடப் பகிர்வு, பொருளாதாரம் தொடர்பான மோதல்கள் போன்றவை அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் எங்கனா மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலைத்  தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் அந்த பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையிலும், சாலைகளிலும், புல்வெளிகளிலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 64 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதலில் இறந்தவர்களில் சிலர் AK47, M4 போன்ற உயர் ஆற்றல்மிக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த செய்தி சமூக ஆர்வலர்களை பேரதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டும் அவர்களிடைய ஏற்பட்ட ஒரு பெரிய மோதலில் 60 பேர் பலியாகினர்.

இதையும் படியுங்கள்:
இனி அயோத்தி ராமருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு!
பப்புவா நியூ கினியா

இந்த மோதல் தொடர்பாக பேசிய பப்புவா நியூ கினியா நாட்டின் எதிர்க்கட்சியினர் கூறியதாவது, “சம்பவம் நடந்த இடத்திற்கு 100 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மோதல் மட்டும் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகத் தெரியவில்லை. இந்த வன்முறையில் பழங்குடியினர் உயர் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு எப்படி இந்த துப்பாக்கிகள் கிடைத்தன, எங்கு வாங்கினார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எனவே, அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com