குழந்தைகளுக்கான பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹாலா? தமிழக சுகாதாரத்துறை விளக்கம்!

"95% ஆல்கஹால்" என்பது தூய்மையைக் குறிக்கும் சொல்; பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் உறுதி!
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்
சிரப் மருந்துகள்AI Image
Updated on

குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள் பாராசிட்டமால் டானிக் வகைகளை பரிந்துரைப்பார்கள். அந்த மருந்தை உள்கொள்ளும் குழந்தைகள் நன்றாக தூங்குவது வழக்கம். இதற்குக் காரணம், அவர்களைத் தூங்க வைத்து உடல்நிலையைச் சீராக்கும் விதமாக அதில் சிறு சதவீதம் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான் என்று பலர் நினைப்பதுண்டு. அது ஒரு சில மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், மிகவும் பாதுகாப்பான முறையில் மட்டுமே ஆல்கஹால் மிக குறைந்த சதவீதம் பயன்படுத்தப்படுகிறது என்று மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், "பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் உள்ளது" என்ற தகவல் சமூக வலைதளங்களில் வதந்தியாகவும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட செய்தியாகவும் பரவி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் மருந்துகளை வழங்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த அச்சத்தை போக்கும் வகையில், தற்போது தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. பாராசிட்டமால் மருந்தை எளிதில் கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம். இந்த ஆல்கஹாலின் அளவு 10% என்ற வரம்பிற்குள்தான் இருக்கும்.

உதாரணத்திற்கு, 60 மி.லி. அளவு கொண்ட மருந்துப் பாட்டிலில் 10% அதாவது 6 மி.லி. அளவிலேயே ஆல்கஹால் பயன்பாடு இருக்கும். '95% ஆல்கஹால்' என்பது ஆல்கஹாலின் தூய தன்மையைக் (Purity) குறிப்பிடும் சொல் மட்டுமே. எனவே, மக்களிடையே தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்பதே அந்த விளக்கம்.

ஏனெனில், குழந்தைகளின் உடலில் ஆல்கஹாலைச் செரிமானம் செய்யக்கூடிய சில என்சைம்கள் (Nொதிகள்) முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. இரத்தத்தில் ஆல்கஹால் சேர்வது மூளையின் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிடும் என்பதால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து முகமை (EMA) போன்ற உலகின் முன்னணி மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள், குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹாலின் அளவை மிகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பரிந்துரைக்கின்றன.

உண்மையில் அனைத்து பாராசிட்டமால் சிரப்புகளிலும் ஆல்கஹால் இருப்பதில்லை. சில மருந்து தயாரிப்புகளில் மட்டும், குறிப்பிட்ட தயாரிப்பு முறைக்காக மிக குறைந்த அளவு எத்தனால் (Ethanol) பயன்படுத்தப்படலாம். குழந்தைகளுக்கான பல பாராசிட்டமால் சிரப்புகள் ஆல்கஹால் இல்லாமல் Alcohol-free ஆக தயாரிக்கப்படுகின்றன என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பாராசிட்டமால் சிரப்புகளில் மருந்தைக் கரைக்கவும், அது சீராகக் கலந்திருக்கவும் பின்வரும் துணைப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன:

  • கிளிசரின் (Glycerin)

  • புரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol)

  • சோர்பிட்டால் (Sorbitol)

ஆல்கஹால் என்பது நரம்பியல் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடிய ஒரு கரிமக் கரைப்பான் (Organic Solvent) ஆகும். இது திரவ மருந்துகளில் கரைப்பானாகவும், மருந்தைப் பதப்படுத்தவும், மணமூட்டியாகவும் துணைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கான திரவ மருந்துகளில் ஆல்கஹால் சேர்ப்பது சில ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஏனெனில், குழந்தைகளிடையே ஆல்கஹாலை வளர்சிதை மாற்றம் செய்யும் சில நொதிகள் முழுமையாக வெளிப்படுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹால் சேர்வது மூளையின் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிடுகிறது என்பதால் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து முகமை (EMA) போன்ற உலகின் முக்கிய மருந்து முகமைகள், குழந்தைகளிடம் ஆல்கஹால் நச்சுத்தன்மையைத் தடுப்பதற்காக, குழந்தைகளுக்கான மருந்துக் கலவைகளில் ஆல்கஹாலின் அளவைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கின்றன.

Cough Syrup
Cough Syrup

இருப்பினும், இந்தப் பரிந்துரை போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை என்று கருதுவதால் குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் கட்டுப்பாடு குறித்த தற்போதைய விதிமுறைகளையும், பல்வேறு நாடுகளில் இந்த விதிமுறைகளின் பயன்பாட்டையும் ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வு மருந்துகளில் உள்ள ஆல்கஹாலின் அம்சம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் , குழந்தைகளிடம் ஆல்கஹாலால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்த புரிதலை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்புகள் கூறுகிறது.

"பாராசிட்டமால் மருந்தை கரைக்க ஆல்கஹால் பயன்படுத்துவது வழக்கம்" என்று பரவி வரும் தகவல் தவறு எனவும் கூறப்படுகிறது. பொதுவாக மருத்துவம் பரிந்துரை செய்யும் பாராசிட்டமால் சிரப்புகளில், மருந்தை கரைக்கவும் சீராக கலந்திருக்கவும் கிளிசரின் (Glycerin), புரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol), சோர்பிட்டால் (Sorbitol) போன்றவைகளே பயன்படுத்தப்படுவதாகவும் சில தயாரிப்புகளில் மட்டும், குறிப்பிட்ட மருந்துப் பொருட்களை கரைக்க மிகக் குறைந்த அளவு எத்தனால் சேர்க்கப்படலாம் எனவும் மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கான சில திரவ மருந்துகளில் (Syrup/Oral Solution) மிகக் குறைந்த அளவில் எத்தனால் (Ethanol/Alcohol) பயன்படுத்தப்படலாம். ஆனால் இது அனைத்து மருந்துகளிலும் இருப்பதில்லை .குறிப்பாக ஆல்கங பயன்படுத்தப்பட்டாலும், அது மருந்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட பாதுகாப்பான அளவிலேயே இருக்கும் என்பதால் அச்சம் தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:

  • வயது வாரியான கட்டுப்பாடு: 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஆல்கஹால் அளவு 0.5 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை மருந்தின் லேபிளைப் பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

  • ஆல்கஹால் இல்லாத மருந்துகள்: உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி, குழந்தைகளுக்கு எப்போதும் ஆல்கஹால் இல்லாத (Alcohol-free & Sugar-free) மருந்துகளை தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது.

  • மருத்துவரின் ஆலோசனை முக்கியம்: மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. குறிப்பாகக் குழந்தைக்குக் கல்லீரல் பாதிப்பு அல்லது பிற சிறப்பு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அதை மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

  • பாதுகாப்பு விதிகள்: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின்படி மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஒருவேளை மருந்தில் ஆல்கஹால் இருந்தால், அது லேபிளில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என்பது விதியாகும்.

மேலும் தற்போது குழந்தைகளுக்காகவே ஆல்கஹால் மற்றும் சர்க்கரை இல்லாத (Alcohol-free & Sugar-free) மருந்துகள் பரவலாக கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

எனவே, "அனைத்து பாராசிட்டமால் சிரப்புகளிலும் ஆல்கஹால் உள்ளது" அல்லது "குழந்தைகளுக்கு கொடுக்கும் பாராசிட்டமால் சிரப் ஆல்கஹால் கலந்தது" என்பது தவறான கருத்து.

இதையே சுகாதார துறையின் அறிக்கையும் தெளிவுபடுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
Interesting facts about the ICC Men’s T20 World Cup 2024!
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்
இதையும் படியுங்கள்:
அரிசியில் புழு, வண்டு தொல்லையா... இந்த 1 பொருளை போடுங்க, அற்புதம் நடக்கும்!
சிரப் மருந்துகள்|இருமல் சிரப்
logo
Kalki Online
kalkionline.com