திருச்சியில் பார்சல் டெலிவரி ஸ்கேம்.. உஷார் மக்களே!

Delivery Package Scam
Delivery Package Scam

அமேசான் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இன்று திருச்சியில் ஸ்கேம் நடந்துள்ளது. ஆர்டர் செய்யாத பார்சலை கொடுத்துப் பணம் பறித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 5ம் தேதி ஆர்டர் ஷிப் ஆனதாக அந்த நபரின் போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. அதை அவர் அப்போது பார்க்கவில்லை. இதனையடுத்து அந்த நபருக்கு இன்று காலை போன் வந்தது. அந்தப் போனில் இன்று ஆர்டர் வந்துவிடும் என்று கூறியுள்ளனர். என்ன ஆர்டர் செய்தோம் என்று சிந்திப்பதற்குள் ஆர்டர் ஐந்தே நிமிடங்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. அந்த டெலிவரி பாயிடம் அவர்கள் எதுவுமே ஆர்டர் செய்யவில்லை என்றுக் கூறியதற்கு அவர் நாங்கள் எதுவும் செய்யமுடியாது, இப்போதைக்கு வாங்கிக்கொள்ளுங்கள், பிறகு அமேசானில் ரிப்போர்ட் செய்யுங்கள் என்று கூறி 620 ரூபாயை வாங்கிவிட்டு ஆர்டரைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதனைப் பிரித்துப் பார்க்கையில் ஒரு மட்டமான துணியில் பேன்ட் வந்தது. அதனைப்பற்றி அமேசானில் ரிப்போர்ட் செய்கையில் இதுத்தொடர்பாக 10 நாட்களில் ஆக்ஷன் எடுக்கப்படும் என்றுக் குறிப்பிட்டிருந்தது. அந்த நபரின் அமேசான் பக்கத்தில் மூன்று மாதங்களில் எந்த ஆர்டரும் செய்யவில்லை என்றே குறிப்பிட்டிருந்தது.

Today scam parcel
Today scam parcel

இதனையடுத்து மீண்டும் அந்த டெலிவரி பாயைத் தொடர்புக் கொள்கையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே போனைக் கட் செய்துவிட்டார். மீண்டும் வேறு நம்பரிலிருந்துத் தொடர்பு கொள்கையில் அந்த நம்பருக்குத் தொடர்பே போகவில்லை. மேலும் அந்த ஆர்டர் பேக்கேஜில் ஆர்டரின் தொகையும் குறிப்பிடவில்லை. அதேபோல் அதில் நிறைய QR Code-கள் இருந்தன. எந்த QR Code-களும் வேலை செய்யவில்லை. இதனையடுத்து இது ஒரு பக்கா திட்டமிட்ட ஸ்கேம் என்பது தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு இதுதொடர்பாக பல செய்திகள் வந்தன. அதாவது ஒரு பொருள் ஆர்டர் செய்து பணம் செலுத்திய பிறகு மீண்டும் கால் செய்து ஆர்டரை உறுதிசெய்ய சொல்லிவிட்டு, பணம் வரவில்லை மீண்டும் பணத்தை அனுப்புங்கள் என்று கூறுவது போன்ற ஸ்கேம் நடந்தது. அதேபோல் ஆர்டர் செய்யாத பேக்கேஜ்களைக் கொடுத்துவிட்டு டெலிவரி பாய்களுக்கும் ஆர்டருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு Cash on delivery மூலம் பணம் பறித்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த ஸ்கேம் வெளியே தெரியாமல் இருப்பதற்கு அமேசான், ஃப்லிப்கார்ட் போன்றப் பெரிய நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதுப்போன்ற செய்திகள் சென்ற ஆண்டே வந்தன. இந்தநிலையில் இப்போது மீண்டும் இந்த ஸ்கேம் அதிகமாகிவிட்டன.

ஒருவேளை ஆர்டர் செய்யாத பார்சல் உங்களுக்கு வந்தால் பணம் கொடுக்காமல், முதலில் அவரிடம் விசாரியுங்கள். பின் ஆர்டர் எதிலிருந்து வந்தது என்பதைக் கேட்டு உங்கள் போனில் அந்தச் செயலியில் ஆர்டர் செய்தீர்களா என்றுப் பாருங்கள். அதுவும் இல்லையென்றால் அந்தப் பார்சலில் உள்ள Font புரியும்படி உள்ளதா என்றும் QR Code வேலை செய்கிறதா என்றும் ஆர்டரின் தொகை அந்தப் பார்சலில் இருக்கிறதா என்றும் பாருங்கள். பின்னர் வந்த மெசேஜில் track ஆப்ஷனைப் பயன்படுத்திப்பாருங்கள். மேலும் அந்தச் செயலியில் உள்ள Order history-ஐ பாருங்கள். அதில் நீங்கள் ஆர்டர் செய்த உண்மையானத் தகவல் மட்டுமே இருக்கும். இவற்றைவைத்து அது ஸ்கேமா அல்லது அந்த ஆர்டர் எதும் மாற்றி வந்துவிட்டதா என்பதைக் கண்டுப்பிடித்துவிடுவீர்கள்.

இதையும் படியுங்கள்:
மெட்ரோவில் அறிமுகமாகவுள்ள புதிய அம்சங்கள்.. பயணிகள் இனி கவலையே இல்லாமல் பயணம் செய்யலாம்!
Delivery Package Scam

ஒருவேளை பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், அந்தச் செயலியில் உள்ள Customer service-ஐ பயன்படுத்தி ரிப்போர்ட் செய்யுங்கள். அதில் Report unwanted package form-ஐ fill செய்துப் பதிவிட்டால், அந்தச் செயலி அதற்கான ஆக்ஷனை எடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com