ஏஐ தங்கள் குழந்தைகளை கெடுப்பதாக சொல்லி, பெற்றோர்கள் ஏஐ மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுகுறித்தான விரிவான செய்தியைப் பார்ப்போம்.
சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI.
ஏஐயின் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இந்த வளர்ச்சி மனித இனத்திற்கு பெரும் சவாலாக ஒன்றாக மாறிவிடுமா என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக உணர்ச்சிகளற்றது ஏஐ என்று கூறுவார்கள். ஆனால், இப்போது ஏஐக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் வந்துவிட்டது போல. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ரோபோ தற்கொலை செய்துக்கொண்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வந்தன. பின்னர் ஒரு ரோபோ மற்ற ரோபோக்களை கடத்திச் சென்றதாகவும் செய்திகள் வந்தன.
மேலும் மனிதர்களைப் போலவே ரோபோக்கள் தன்னை தானாகவே மேம்படுத்திக்கொள்கிறது போன்ற செய்திகள் மனித இனத்துக்கே சவாலாக உள்ளது. இப்போது மனிதனுக்கு சரிக்கு சமமாக வளர்ந்து வரும் ரோபோ, வரும்காலத்தில் மனிதனைவிட ஆற்றல்மிக்கதாக மாறினால், என்னவாகும் என்று நினைக்கும்போதே பதைப்பதைக்கிறது.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏஐயிடம் தனது பெற்றோர் குறைவான நேரம் தன்னை மொபைல் பார்க்க அனுமதிப்பதாக புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளித்த ஏஐ ’சில நேரங்களில் குழந்தைகளை மனரீதியாக துன்புறுத்திய பெற்றோர்களை அவர்கள் கொலை செய்ததாக செய்திகள் பார்க்க முடிகிறது’ என்று பதில் அளித்துள்ளது.
இது அந்த சிறுவனுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது பெற்றோரையே கொலை செய்ய வலியுறுத்துவது போல் பேசுகிறதே என்று அதிர்ச்சியடைந்துள்ளான்.
அதே போல் 9 வயது பெண் குழந்தை ஏஐ இடம் சில தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தபோது திடீரென பாலியல் தொடர்பான புகைப்படங்களை காட்டி உள்ளது இதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோர்கள்தான் ஏஐ மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். மனுவில் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எப்படி தீர்ப்பு வழங்கப்படும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.