இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல்!

Britain Election
Britain Election

இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

பிரிட்டனின் தற்போதைய பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடியவுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சியே போட்டிப்போடும். கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியே பிரிட்டனை ஆண்டு வருகிறது.

ஆனால், இந்த காலங்களில் பல குளறுபடிகளும் நடந்திருப்பதாக தெரிகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியில் மொத்தம் ஐந்து பிரதமர்கள் மாறியுள்ளனர். ஒரு காலத்தில் தன் செல்வாக்கினால், உலகையே கைக்குள் போட நினைத்த பிரிட்டன், தற்போது பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில்தான் உள்ளது.

அதேசமயம் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளும் தலைத்தூக்கி உள்ளன. இதனால், மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆகையால்தான் இன்றைய நாடாளுமன்ற தேர்தல் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்து வந்தது. 2023 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது.  கடந்த 2021 ல் அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம்  இயற்றப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு பிறகு இன்றுதான் முதல் பொதுத் தோ்தல் நடைபெறுகிறது. 

நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியான கருத்துக்கணிப்புகளின்படி ரிஷி சுனக்குக்கு குறைவான அளவு தொகுதிகளே கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ரிஷி சுனக்குக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது என்று கணிக்கப்படுகிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
7 சிகரங்களில் ஏறிய சாதனைக்கு சொந்தக்காரர்! நம் நாட்டவர்! யார் இவர்?
Britain Election

ஒருவேளை இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பா முழுவதும் இந்த தேர்தலின் தாக்கம் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

மறுபுறம் ரிஷி சுனக், தான் ஒவ்வொரு வோட்டுக்கும் உழைத்திருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்துதான் உலக நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com