நேற்று சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுமே போரை நிறுத்த முன்வருவதாக தெரியவில்லை.
ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன.
இப்படியான நிலையில், உக்ரைன் ஆதரவு நாடான அமெரிக்கா நேற்று ரஷ்யாவிடம் போர் நிறுத்தம் குறித்து பேசியிருக்கிறது. இதன் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர் நிறுத்த முயற்சிகளை எடுக்க ரஷ்யா மற்றும் அமேரிக்கா இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து அமெரிக்கா அமைச்சர் பேசுகையில், “இந்த மீட்டிங்கில் 3 முக்கிய விஷயங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மாஸ்கோ, வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா, ரஷ்யாவின் தூதரங்களில் அதிகாரிகள் நியமனம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட அளவில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா உடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனை அழைக்கவில்லை. அடுத்த பேச்சுவார்த்தையில் அழைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த மீட்டிங்கின்மூலம் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஏனெனில், நேற்றைய பேச்சுவார்ததையிலும் அமெரிக்காவில் உள்ள ரஷ்யா தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ரஷ்யாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்துவதாக அமெரிக்க கூறியுள்ளது.