

மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களின் மீதான திடீர் விலை உயர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் வரலாறு காணாத விலை உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்கள், உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தால் என்ன செய்வது என்ற கவலையில் உள்ளனர்."
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு என்று மக்களிடம் ஒரு தனி மவுசு உண்டு. மலிவான விலையில் கிடைப்பதாலும் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த பொருளாக இந்த கடலைமிட்டாய் உள்ளது. பாகுபாடின்றி அனைவரும் வாங்குவார்கள். ஏனெனில் அது தனி சுவையுடன் ஃபிரெஷாக இருக்கும். இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தபின் வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் என ஏற்றுமதியாகி விற்பனை அதிகரித்துள்ளது.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 10,000 மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் இந்த கடலை மிட்டாய் தயாரிப்பில் அடங்கியுள்ளது. இதில் நேரடியாக மறைமுகமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அதில் 50 சதவீதம் பெண்கள் பணி புரிவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விலை கிலோ ₹220 ஆவது உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளது கடலை மிட்டாய் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை கடலை மிட்டாய் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கும் நிலக்கடலை 80 கிலோ மூட்டை ரூபாய் 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 14,000 ஆக இருமடங்கு விலை உயர்ந்து விட்ட நிலையில் மிட்டாய் தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளது எனவும் அதை சமாளிக்கும் வகையிலும் இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கவும் இந்த விலை உயர்வு அவசியம் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
"நிலக்கடலையின் விலை ஏற்றம் காரணமாக கடலை மிட்டாய் வலையை 40% உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், நிலக்கடலை உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளதாகவும் எனவே நிலக்கடலை உற்பத்தி ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். நமது தேவைக்கு பிறகு தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் "எனவும் மேலும் பல ஊர்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் பெயரை பயன்படுத்தி உற்பத்தி செய்து விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஒரு கிலோ கடலை மிட்டாய் மொத்த விலை ரூபாய் 160 ரூபாயிலிருந்து 220 ரூபாயாகவும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படும் என்று கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அவர்கள் விற்பனையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி பசிக்கு கடலை மிட்டாய் வாங்குவதையும் யோசித்து தான் வாங்க வேண்டும்...