அப்துல் கலாமிடம் பேசலாம். டைனோசரை பார்க்கலாம்! பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

கோவையில் ரூ.300 கோடியில் தந்தை பெரியார் அறிவுலகம் திறப்பு! பிரம்மாண்ட வசதிகள் என்னென்ன?
தந்தை பெரியார் அறிவுலகம்
தந்தை பெரியார் அறிவுலகம்
Updated on: 

தமிழக பொதுப்பணி துறையின் சார்பில், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே, சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 6.98 ஏக்கர் பரப்பளவில், 1.98 லட்சம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் ரூ.300 கோடி மதிப்பில் ‘பெரியார் அறிவுலகம்’ எனப்படும் ‘பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்’ கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-ல் தொடங்கிய இப்பணி தற்போது நிறைவடைந்துள்ளது.திட்ட மதிப்பில், ரூ.245 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூ.50 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி இ-புத்தகங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியை கண்டுகளிக்கும் வகையில் கோளரங்கம், ஃஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.இம்மைய வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ள வசதிகளின் விவரங்கள் பின்வருமாறு:

• தரைத்தளம் (Ground Floor): 350 முதல் 400 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம் (Auditorium), கோளரங்கம் (Planetarium), 6,000 சதுர அடியில் அறிவியல் கண்காட்சி பகுதி, விண்வெளி பயணத்தை உணர்த்தும் விண்வெளி உருவகப்படுத்துதல் மின்தூக்கி (Space-simulation lift) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி (Braille) புத்தகங்கள் கொண்ட பிரத்யேக நூலகப் பகுதி ஆகியவை அமைந்துள்ளன.

• முதல் தளம் (First Floor): வரலாற்று சிறப்புகளை காட்டும் கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரி வடிவம் மற்றும் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலான STEM ஊடாடும் அறிவியல் கற்றல் மாதிரிகள் (Interactive Learning Models) இங்கு இடம்பெற்றுள்ளன.

• இரண்டாம் தளம் (Second Floor): குழந்தைகளுக்கான பிரத்யேக சிறுவர் நூலகம் (Children’s Library), மல்டிமீடியா காட்சி அறைகள் மற்றும் தனியாக அமர்ந்து படிப்பதற்கான சுய வாசிப்பு மண்டலம் (Self-reading zone) ஆகியவற்றை உள்ளடக்கியது.

• மூன்றாம் தளம் (Third Floor): அரசு மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு தயாரிப்பு நூலகம் (Competitive Exam Library) மற்றும் நூலகத்தின் நிர்வாக அலுவலகங்கள் இந்தத் தளத்தில் உள்ளன.

• நான்காம் தளம் (Fourth Floor): பரந்த அளவிலான தமிழ் இலக்கியப் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள் மற்றும் விரிவான குறிப்புதவிப் புத்தகங்கள் (Reference materials) கொண்ட பொது வாசிப்பு அரங்கம் இங்கு அமைந்துள்ளது.

• இரண்டாம் தளம் (Second Floor): குழந்தைகளுக்கான பிரத்யேக சிறுவர் நூலகம் (Children’s Library), மல்டிமீடியா காட்சி அறைகள் மற்றும் தனியாக அமர்ந்து படிப்பதற்கான சுய வாசிப்பு மண்டலம் (Self-reading zone) ஆகியவற்றை உள்ளடக்கியது.

• மூன்றாம் தளம் (Third Floor): அரசு மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான போட்டித் தேர்வு தயாரிப்பு நூலகம் (Competitive Exam Library) மற்றும் நூலகத்தின் நிர்வாக அலுவலகங்கள் இந்தத் தளத்தில் உள்ளன.

• நான்காம் தளம் (Fourth Floor): பரந்த அளவிலான தமிழ் இலக்கியப் புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்கள் மற்றும் விரிவான குறிப்புதவிப் புத்தகங்கள் (Reference materials) கொண்ட பொது வாசிப்பு அரங்கம் இங்கு அமைந்துள்ளது.

• ஐந்தாம் மற்றும் ஆறாம் தளங்கள் (Fifth & Sixth Floors): புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான இன்குபேஷன் மையங்கள் (Incubation Centres) மற்றும் கோ-வொர்க்கிங் இடங்கள் (Co-working spaces) இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

• ஏழாம் தளம் (Seventh Floor): இந்த இறுதித் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட டிஜிட்டல் நூலகம் (Digital Library) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோடிக்ஸ் (Robotics), ஏஆர்/விஆர் (AR/VR) போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்களை விளக்கும் "எதிர்கால கேலரி" (Future Gallery) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தரைத்தளத்தின் கடைசி பகுதியில் கோளரங்கத்தில் வானியல் அதிசயங்களை ரசித்துப் பார்க்கலாம். ரோபோவுக்கு முன் நின்று மைக்கில் கேள்வி கேட்கலாம்; இணையத்தில் தேடி, நமது கேள்விக்கான பதிலை சொல்லும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் அருகே இருக்கையில் நாமும் அமர்ந்து பேசுவதுபோல் ஏ.ஆர்., தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கேள்வி கேட்டால், அவர் பதிலளிப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

சூரிய குடும்பத்தின் செயல்பாடுகளை அறியலாம். எடை அளவிடும் மேடை உள்ளது. அதன் மீது நின்றால், சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களிலும் எடை எவ்வளவு மாறுபடுகிறது என அறியலாம். உலகம் இங்கே தலை கீழே என்கிற தலைப்பில் மாய அறை படிப்பகம் வடிமைக்கப்பட்டு உள்ளது.

புத்தக அலமாரி, மேஜை, நாற்காலி, கடிகாரம், கதவு உள்ளிட்ட நுாலக அறை தலைகீழாக அமைந்திருக்கிறது.இயந்திர டி-ரெக்ஸ் இயக்கத்தில் டைனோசர் இருக்கிறது. அதன் இயக்கத்தை உயிரோட்டமாக காட்டுகிறது. கை அசைவுகளால் இசைக்கும் சுவர் இருக்கிறது. சுழல் சுரங்கமும், ஹோலோகிராம் வலைச்சுவர், ஆழம் தெரியாத பள்ளமும் நம்மை மிரள வைக்கும். இதுபோல், பல்வேறு அறிவியல் அதிசயங்களை பார்த்து அதிசயிக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிதாக புரியும் வகையில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com