#JUST IN : விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி..!!

TVK Vijay
TVK Vijay
Updated on

தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். வேட்புமனுவில் மனைவிக்கு ரூபாய் 12.60 கோடி கடன் கொடுத்ததாக விஜய் குறிப்பிட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய, பெரம்பூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், "உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதற்குச் சமம்" என்று குறிப்பிட்டிருந்தார் . இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

இதே கோரிக்கையோடு தாக்கல் செய்யப்பட்ட முந்தைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இது தான் நம்ம தமிழ்நாடு..! தஞ்சாவூர் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்..!
TVK Vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com