வாகன ஓட்டிகள் ஷாக்..! 6வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!

petrol
petrol
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக நாட்டில்  எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மே 15 ஆம் தேதி உயர தொடங்கியதிலிருந்து இன்றுடன் 6-வது முறையாக உயர்ந்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மே 25-ல் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்து 3 நாட்களாக விலை உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 33 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 108.20-க்கும், டீசல் விலை 32 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசலுக்கு நிகராக சி.என்.ஜி விலையும் உயர்ந்து வருகிறது. சென்னையில் சி.ன்.ஜி விலையானது ரூ.3.50 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த, 13 நாட்களில் மட்டும், 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அதிமுக 2.0: மீண்டும் இணைந்த இபிஎஸ் - எஸ்.பி.வேலுமணி..?
petrol
logo
Kalki Online
kalkionline.com