பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பிங்க் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை உலகமே கொண்டாடி வருகிறது. முன்பைவிட மிகவும் அதிகமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் பெண்களின் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை உலகம் முழுவதுமே எடுக்கப்படுகின்றன.
அதேபோல்தான் தமிழகத்திலும் இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பை முன்னிட்டு பிங்க் ஆட்டோக்களை அறிமுக்கப்படுத்தியிருக்கிறது.
ஆம்! சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களையும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
இந்த திட்டத்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதேபோல், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தமிழக அரசு ஏற்கனவே பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. முதலில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை 'காவலன் SOS' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் பணிபுரியும் பெண்கள் இலவசமாக பேருந்தில் செல்வதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
பெண்கள் யாரையும் நம்பி இருக்காமல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
இதுபோல் ஏராளமான திட்டங்களை பெண்கள் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் செய்து வருகிறது. இந்த வரிசையில்தான் தற்போது பிங்க் ஆட்டோ திட்டமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கி, 2 கோடி ரூபாய் செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (Pink Auto) இயங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே ரேபிடோ போன்ற செயலிகளில் பிங்க் ஆப்ஷன் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.