தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

Boat
Boat
Published on

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். இதனால், படுகாயமடைந்த மீனவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் உள்ள மீன்களை நம்பி வாழும் மீனவர்கள், ஏகப்பட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. இயற்கை கொடுக்கும் சவால்களை விட, கடற்படையினரால் ஏற்படும் சவால்களே அதிகம்.

எப்போதும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கடற்படையினர்தான் சிறைப் பிடிப்பார்கள். இலங்கை கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழக அரசும் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்துதான் வருகிறது.

இதற்கிடையில் இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களைத் தாக்கி வலைகளையும் படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கமாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, கடல்கொள்ளையர்கள் அவர்களை தாக்கியிருக்கிறார்கள். நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில்  மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கினர். அதேபோல், அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ட்ரம்பை கொல்லத் திட்டமிடும் பாகிஸ்தான் நபர்? உண்மை என்ன?
Boat

கடற்கொள்ளையர்கள் மீனவர்களை பலமாக தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மீனவர்களை கத்தி, கம்பால் தாக்கிவிட்டு படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், வலைகள், செல்போன் ஆகியவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக படகில் பயணித்த ஒரு மீனவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மீனவ வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com