பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - பாஜக வெளியிட்ட 6,969 என்ற அந்த மர்ம எண்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!

சென்னை பாஜக தலைமையகத்தில் திமுக அரசு மீது குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
Piyush Goyal
Piyush Goyalimage credit-@NainarBJP
Published on

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நேற்று மாலை தமிழகம் வந்திருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், மேலும் புனிதமான தமிழக மண்ணை போதை கலாச்சாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிக்கை முக்கிய ஆதாரமாக அமைகிறது.

பாஜக வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அறிக்கையில் சில முக்கிய புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழகத்தில் பாலியல் அத்துமீறல்கள் 2022-ம் ஆண்டில் 1,414 ஆக இருந்ததாகவும், ஆனால் 2024-ம் ஆண்டில் அது 1,885 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுபோல் போக்சோ (POCSO) வழக்குகள் 2022-ம் ஆண்டில் 4,968 இருந்த நிலையில் 2024-ம் ஆண்டில் 6,969 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 6,969 ஆக உயர்ந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2022-இல் 3,260 என்ற எண்ணிக்கையில் இருந்து 2024-இல் 5,319 ஆகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிமுக-விற்கு கெடு விதித்த பாஜக: அதிர்ச்சியில் இபிஎஸ்.!
Piyush Goyal

திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த பாஜக வெளியிட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகை தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com