IPL-ல் நடந்த சோகம்... மைதானத்திற்குள் நுழைந்த ஆம்புலன்ஸ்:டெல்லி வீரருக்கு தலையில் பலத்த காயம் !

DC cricket Lunki Engkidi Injured
IPL cricketer Injured
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

ஐபிஎல்-இன் 19-வது சீசன் போட்டியில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ,

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் , கேட்ச் பிடிக்கும் பொழுது டெல்லி அணி வீரர் லுங்கி என்கிடி தலையில் பலத்த காயமடைந்தார். இந்த காயத்திற்கு பிறகு அவரால் எழுந்து நிற்கவோ கண்களை திறக்கவும் முடியவில்லை. சுற்றி இருந்த அணி வீரர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்ய முடிவு செய்தனர்.

பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர்கள் உடனடியாக அவசர உதவியை நாடினார்கள். முதலில் அவரைஸ்ட்ரெச்சரில் வைத்து மைதானத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் , அவரது நிலைமை மோசமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் நேரடியாக மைதானத்திற்கு உள்ளேயே வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. பலத்த காயம் காரணமாக லுங்கி என்கிடி தற்போது போட்டியில் இருந்து விலகியுள்ளார், அவருக்குப் பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி துஷ்மந்தா சாமிராவை சேர்த்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com