

அயோத்தியில் ஶ்ரீ ராமர் கோயில கும்பாபிஷேகம் நிறைவுற்று , முழு அளவினான கட்டிடப் பணிக்க முடிந்ததன் அடையாளமாக, கோயிலில் கொடி ஏற்றும் வைபவம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு பாரம்பரியமிக்க கோயில்களிலும் கொடி ஏற்றுதல் திருவிழாவின் தொடக்கமாக உள்ளது. பல கோயில்களில் கொடி எப்போதும் அதன் கோபுரத்தில் அல்லது விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்.ஒரிசாவின் பூரி ஜெகந்நாத் கோயிலில் கொடி ஏற்றுதல் என்பது , மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருக்கும் , தினசரி அதை கண்டுகளிக்கவே பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
இன்று நவ.25, அயோத்தி ஶ்ரீ ராமர் கோயிலில் நடைபெற்ற 'த்வஜ் ஆரோஹன்' விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி புனிதக் கொடியேற்றினார். கார்த்திகை மாதத்தின் பஞ்சமி மற்றும் ராமருக்கும் சீதா தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த விவாஹ் பஞ்சமி தினத்தை முன்னிட்டும் , கொடியேற்றும் விழா நடைபெற்றது. நண்பகலில், ராமர் கோயில் விமானத்தின் மேல் 22 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்ட முக்கோண வடிவ காவி நிறக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.
161 அடி கோயில் உச்சியில் , இயற்கை இடர்களை தாங்கும் வகையில் கொடியை அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பாராசூட் நிபுணர் வடிவமைத்துள்ளார். 3 கிலோ வரை எடையுள்ள இந்தக் கொடி, 42 அடி உயரக் கொடிக்கம்பத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொடி இந்தியர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் காவி வண்ணத்திலும் , ஶ்ரீ ராமர் பிறந்த சூரிய வம்சத்தைக் குறிக்கும் வகையில் , அதில் சூரியனின் உருவத்தையும் , புனித மந்திரமான ஓம் என்ற எழுத்தையும் , கோவர்தன மரம் ஆகியவற்றை கொடியில் பொறித்துள்ளனர். கொடியேற்றும் நிகழ்வு , கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கிறது.
மேலும் பிரதமர் மோடி உரையில் " அயோத்தி நகரம் பகவான் ஸ்ரீ ராமர், தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய நகரம் , இது ஒரு புனித பூமி. சமூகத்தின் வலிமை மற்றும் மதிப்புகள் மூலம் ஒரு நபர் எவ்வாறு 'மரியாதா புருஷோத்தமராக' உயர்கிறார் என்பதை அயோத்தி உலகிற்குக் காட்டியது. ஸ்ரீ ராமர் அயோத்தியை விட்டு வனவாசம் புகும் போது அவர் ஒரு இளவரசராக இருந்தார். அவர் நாடு திரும்பிய போது மரியாதா புருஷோத்தமராக வந்தார்" கோயிலுக்கு வெகு தொலைவில் இருப்பவர்கள் கூட, அதன் கோபுரத்தையும் கொடியையும் பார்த்து வணங்கினாலே அதன் புண்ணியம் வந்து சேரும் என்று பேசினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.