உலகின் மிக உயரமான ராமர் சிலை இன்று திறப்பு..!

ramar statue
ramar statueSource:Makkal osai
Published on

77 அடி உயர ராமர் சிலையை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இதனை கோவாவில் உள்ள சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில் பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைக்கிறார். 77 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை திறந்து வைக்கும் மோடி அவர்கள் சிறப்பு அஞ்சல் தலை & நாணயத்தையும் வெளியிட உள்ளார்.

கனகோனாவில்(தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பர்தகலியை அயோத்தியின் தெற்கு பகுதியாக உருவாக்கி நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் அந்த இடத்தை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மடத்தின் 550 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார். பர்தகலியில் உள்ள இந்த மடத்தை மடாதிபதி அவர்கள் புதுப்பித்து, சமஸ்கிருதத்தில் உள்ள பண்டைய மத நூல்களை ஆராய்ச்சி செய்வதற்கான இடத்தையும் உருவாக்கியுள்ளார்.

இன்று பிற்பகல் 3.45 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் இந்த ராமர் சிலையை திறக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் வருகைக்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் கட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ஸ்ரீ ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்று கோவா பொது பொதுப்பணித்துறை அமைச்சர் திகாம்பர் காமத் தெரிவித்தார். இந்த சிலை தான் உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்தகலி ஜீவோத்தம மடம் நாட்டின் மிகவும் பழமையான மடங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550 ஆவது ஆண்டு கால நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் மோடி அவர்கள் வெளியிடுகிறார். ராமாயண கருப்பொருள் பூங்காவும் ராமரின் தாக்கத்தை காட்சிப்படுத்தும் வகையில் 10,000 சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் ராமர் குறித்த அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், விஜயநகரப் பேரரசு காலத்து நாணயங்கள் மற்றும் பல்வேறு பாணிகளில் வரையப்பட்ட ராமரின் ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன.

கோவா கவர்னர் அசோக் கஜபதி ராஜு, முதல் மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய மந்திரி ஸ்ரீபத் நாயக், மாநில மந்திரிகள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிக்கும் ‘APP’- இதுவரை 7.13 லட்சம் செல்போன்கள் மீட்பு..!!
ramar statue

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com