மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
Published on

காங்கிரஸ் கட்சியியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். அதையொட்டி அவருக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், ‘காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான அவரது உறுதியான நம்பிக்கை, அவரது தலைமை, விடாமுயற்சி மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை நம்மை தினமும் ஊக்குவிக்கின்றன. அவரது விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவரது பொது வாழ்வின் அடையாளம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பதிவில், ‘மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழட்டும்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, மாநில மற்றும் தேசிய அளவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சமூக நீதி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் கார்கேவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும். சமூக சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட கார்கே, சாதிக் கொடுமைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த காலங்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் அவர், ஆளும் பாஜக அரசின் கொள்கை கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com