

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 'பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்' கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.இந்த திட்டத்தின்படி தனியார் ஊழியர்களுக்கு மொத்தம் 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான தகுதி, முதல் முறையாக வேலை பெற்று, பி.எப்., கணக்கில் இணைந்திருக்க வேண்டும். மாத சம்பளம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும். வேலையில் இணைந்து ஆறு மாதத்தை பூர்த்தி செய்திருந்தால் முதல் தவணையில் 7,500 ரூபாய், ஓராண்டை பூர்த்தி செய்திருந்தால் இரண்டாவது தவணையாக 7,500 ரூபாய் என மொத்தம் 15,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதேபோல் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனத்துக்கு ஒரு ஊழியருக்கு மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகை என இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும். கடந்த ஏப்ரலில் ஆறு மாத பணி காலத்தை பூர்த்தி செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. அதில் 18,000 நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், 15 லட்சம் ஊழியர்களுக்கான தவணையாக 2,400 கோடி ரூபாயை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் நேற்று (ஜூன் 19) நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்தொகை மூன்று தவணைகளாக ஊழியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி கூறியுள்ளனர்
கடந்த 2025 ஆகஸ்ட்டில் இத்திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை புதிதாக 63 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள். இத்திட்டத்தின் கீழ், 2027க்குள் 3 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு, 99,446 கோடி ரூபாய் செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.முதல்முறையாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
தகுதிகள் :
முன்னனுபவம் இல்லாதவர்கள்: இதற்கு முன்பு எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிந்து, வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கக் கூடாது. முற்றிலும் முதல்முறையாக வேலைக்குச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சம்பள வரம்பு: பணியில் சேரும் புதிய ஊழியரின் மாதச் சம்பளம் ரூ. 1,00,000-க்கு மிகாமல் (ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவாக) இருக்க வேண்டும்.
பணிக்காலம்: வேலைக்குச் சேர்ந்த பிறகு, அந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டும்.
ஆறு மாத காலப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு, மொத்த தொகையான ரூ. 15,000 இரண்டு தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும்:
முதல் தவணை ரூ. 7,500 6 மாத பணிபூர்த்திக்கு பின்
இரண்டாம் தவணை ரூ. 7,500 அடுத்த கட்டமாக
இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை செயல்பட உள்ளது. அதற்குள் மூன்று கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு ரூ.99,446 கோடி செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..