அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்: ரூ.2 லட்சம் முதலீடு.. வட்டி மட்டும் ரூ.89,990...விண்ணப்பிப்பது எப்படி?

எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் குறைந்த தொகையை முதலீடு செய்து பெரிய தொகையை பெற விரும்பினால், போஸ்ட் ஆபீசின் தொடர் வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
post office investment
post office investment
Published on

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் (Post Office Savings Schemes) பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் மத்திய அரசுத் திட்டங்களாகும். இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்தான். இன்றைய காலகட்டத்தில், அனைவரும் சிறிய முதலீட்டிலிருந்து பெரிய நிதியை உருவாக்க உதவும் திட்டங்களிய பெரிதும் விரும்புகிறார்கள். தற்போது மக்களிடையே சேமிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வங்கி டெபாசிட்களை விடப் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் மிகக் குறைவு என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாலும் மக்கள் இதில் முதலீடு செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் குறைந்த தொகையை முதலீடு செய்து பெரிய தொகையை பெற விரும்பினால், போஸ்ட் ஆபீசின் தொடர் வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

போஸ்ட் ஆபீசில் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸின் டிடி (TD) திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.44,995 வட்டி! அசத்தும் போஸ்ட் ஆபீஸ் TD திட்டம் - முழு விபரம் உள்ளே!
post office investment

வங்கி எஃப்டி (FD) திட்டத்தை போன்றது தான் போஸ்ட் ஆபீஸ் டிடி திட்டமும். போஸ்ட் ஆபீஸ் எஃப்டி கணக்குகள் டிடி (TD) என்ற பெயரில் திறக்கப்படுகின்றன. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, உத்தரவாதமான நிலையான வட்டியுடன் உங்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் என்பதால் அந்த திட்டம் பலரின் விருப்ப தேர்வாக உள்ளது. இதில், நீங்கள் ஒருமுறை வெறும் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலம், வட்டியாக மட்டும் ரூ.89,990 பெற முடியும்.

போஸ்ட் ஆபீஸில் உங்கள் விருப்பம் போல் 1 வருடம், 2, 3 மற்றும் 5 வருடத்திற்கு நீங்கள் எஃப்டி கணக்கைத் திறக்க முடியும் என்பதுடன், முதிர்வு காலத்திற்குப் பிறகு நிலையான வட்டியுடன் உங்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். போஸ்ட் ஆபீஸில் 1 ஆண்டிற்கு டிடி-க்கு 6.9 சதவீத வட்டியையும், 2 ஆண்டிற்கு 7.0 சதவீத வட்டியையும், 3 ஆண்டிற்கு 7.1 சதவீத வட்டியையும், 5 ஆண்டிற்கு 7.5 சதவீத வட்டியையும் வழங்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் 5 ஆண்டு டிடி திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும் போது, முதிர்வு காலத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.2,89,990 கிடைக்கும். அதாவது இதில் வட்டியாக மட்டுமே ரூ.89,990 கிடைக்கும்.

ரூ.2 லட்சம் மட்டுமல்ல உங்களால் முடிந்த அளவிற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அதில் முதலீடு செய்யலாம்.

தற்போது, நாட்டில் எந்த வங்கியும் 5 ஆண்டு எஃப்டி திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டியை வழங்காதபோது போஸ்ட் ஆபீஸில் டிடி திட்டம் அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் நியாயமான வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, விண்ணப்பப் படிவம், ஆதார், பான் கார்டு மற்றும் புகைப்படம் சமர்ப்பித்து, ஒரு சேமிப்புக் கணக்கை தொடங்கி, உங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்..! ரூ.2 லட்சம் முதலீடு.. ரூ.2 லட்சம் ரிட்டர்ன்!
post office investment

பணவீக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், வீண் செலவுகளைக் குறைத்து ரூ.2 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம் உங்கள் எதிர்காலத் தேவை, குழந்தைகளின் கல்வி அல்லது சிறு தொழில் தொடங்க ஒரு ஊக்கத்தொகையாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com