போலீஸே அச்சப்படக்கூடிய துறை எது தெரியுமா?

Vigilance Department
Vigilance Department

- தா. சரவணன் 

நாம் பொதுவாக போலீஸ் என்றால் பயப்படுவோம். ஆனால், அந்தப் போலீஸ் துறையே அச்சப்படக்கூடிய துறை என்றால், அது விஜிலென்ஸ்தான். ஏனெனில், அரசுத்துறைகளில் மக்கள் பணி நடக்க லஞ்சம் கேட்பது தெரிய வரும்போது, இவர்கள் உடனடியாக ‛பொறி’ வைத்து லஞ்சம் வாங்கக்கூடிய அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். அதனாலேயே போலீஸ், அரசுத்துறை அதிகாரிகள் மத்தியில் விஜிலென்ஸ் துறை மிகப் பிரபலம்.

பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டிஎஸ்பி தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இப்பணியில் இருப்பார்கள். இவர்களின் முக்கிய பணி, அரசு அலுவலகங்களில், எவ்வித லஞ்ச, லாவண்யம் இல்லாமல் பணிகள் நடக்கிறதா? என்பதை கழுகு பார்வையுடன் பார்த்துக்றகொண்டிருப்பதுதான். இது தவிர்த்து, அரசு அலுவலகங்களில், யாராவது பணி முடித்துத் தர பொது மக்களிடம் இருந்து பணம் அல்லது அன்பளிப்பு கேட்பது குறித்த, புகார் வரின், அப்புகாரில் உண்மைத் தன்மை இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரியை ஆதாரத்துடன் கைது செய்து, கோர்ட் நடவடிக்கை மூலமாக சிறையில் அடைப்பர். அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து அந்த நபர் தான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்து, வெளியே வருவதற்குள் போதும், போதும் என்றாகி விடும்.

இதில் விஜிலென்ஸ் போலீசாருக்கு பெரும் சவாலாக இருப்பது, கோர்ட் நடவடிக்கை மூலமாக தண்டனை பெற்றுத் தருவதுதான்.

‛கவர்னரி்ன் விஜிலென்ஸ் மெடல்’

எடிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் தேர்வு

இந்நிலையில் தமிழகம் முழுக்க, விஜிலென்சில் பணியாற்றி வரும் அதிகாரிகளில் சிறப்பாக பணியாற்றி வரும், அதாவது ஓர் ஆண்டில் அதிகபட்சம் 20 வழக்குகளுக்கு மேல் தண்டனை பெற்றுத் தந்து கொண்டிக்கும் ஒரு ஏடிஎஸ்பி (கூடுதல் எஸ்பி) மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கவர்னர் கையால், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வாங்க, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இவர்கள் திருநெல்வேலி மாவட்ட விஜிலென்ஸ் கூடுதல் எஸ்பி மெக்லின் எஸ்கோல், திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி, காஞ்சிபுரம் மாவட்ட விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ஆவர். இவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 15ம்தேதி கவர்னர் கைகளால் பதக்கம் வழங்கப்பட உள்ளது. விஜிலென்சில் எப்படிதான் பணி செய்தாலும், அதை வெளியாட்கள் யாரும் பாராட்டினால் கூட, அதை அந்தத்துறை அதிகாரிகள், அத்தனை எளிதில் வெளிப்படையாக, மனம் திறந்து பாராட்டிவிட மாட்டார்கள். ஏனெனில், அவர்களின் பணி அப்படியானது. அதனால், இதுபோன்று, பதக்கங்கள் வழங்கி, அவர்களை கவுரவப்படுத்தும்போது, அவர்களும் இன்னும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். அவர்களைப் பார்க்கும் அந்தத்துறை பிற அதிகாரிகளும் தாங்களும் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, சிறப்பாகப் பணியாற்ற முன் வருவார்கள்.

இதையும் படியுங்கள்:
வாராணசியில் மே 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் பிரதமர் மோதி!
Vigilance Department

இதையும் தெரிஞ்சுக்கோங்க: விஜிலென்ஸ் போலீசார், யாரையாவது, பொறி வைத்து பிடிக்கும்போது, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரர் கைகளில் கொடுத்து அனுப்புவார்கள். அதை வாங்கும் அரசு அதிகாரிகள் பின்னர் மாட்டிக்கொள்வார்கள். இதில் ரசாயனம் என்றால் என்ன? என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். இதில் இவர்கள் பயன்படுத்துவது, பினாப்தலின் அல்லது அந்த்ராசீன் ஆகும். இது கைகளில் பட்டதும், பட்ட இடமெல்லாம் பிங்க் நிறத்தில் மாறிப் போகும். இந்தக் கறை அவ்வளவு எளிதில் போகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com